business coaching
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கு ஆயிரம் பேருக்கு மேல் வேலை
பார்த்து வந்தனர். ஒரு நாள், அதன் முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார். அப்போது ஒருவன் மட்டும் வேலை செய்யாமல் ஓரமாக படுத்து காலாட்டிக் கொண்டிருந்தான். முதலாளிக்கு வந்ததே கோபம்… ‘இப்படி ஒருவனை வேலைக்கு வைத்திருந்தால் பிற தொழிலாளிகளும் கெட்டுப்போய் விடுவர் என்று நினைத்தார்.
அவனை அழைத்து, “தம்பி! நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார். அவன் ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு “எட்டாயிரம் ரூபாய் சார்”என்றான்.
உடனே, பிற தொழிலாளிகளுக்கு முன்பு தன் பாக்கெட்டிலிருந்து பதினாயிரம் ரூபாயை எடுத்து, “இதில் உன்னோட இரண்டு மாத சம்பளம் இருக்கிறது. சும்மா படுத்துக்கொண்டு இருப்பவனுக்கு சம்பளம் கொடுக்க இந்த ஃபேக்டரியை நடத்தவில்லை. நீ போகலாம்” என்றார்.
அவன் ஒரு நிமிடம் ‘திரு திரு‘ என முழித்துவிட்டு, அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே நடந்தான். மற்ற தொழிலாளர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்கள்.
முதலாளி மேலாளரைக் கூப்பிட்டு “இந்த மாதிரி ஆட்களை யார் வேலைக்குச் சேர்த்தது?” என்று கேட்டார். மேலாளர் பவ்யமாகச் சென்னார்: “அவன் டீ கொண்டு வந்த எதிர்கடைப் பையன்‘ என்று.
உடனுக்குடன் முடிவெடுக்கப் பழகிவிட்ட அந்த முதலாளி, தவறாக எடுத்த முடிவு இது. உடனே அவர் என்ன செய்தார் தெரியுமா? தான் எடுத்த முடிவுக்காக வருந்தவில்லை. அவர் இந்த முடிவின் மூலம் சொல்ல நினைத்தது, “ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் ஒருவரை வேலையில் வைத்திருக்கக்கூடாது” என்பதுதான்.
எனவே, உடனடியாக, வேலை பார்ப்பவர்களுக்கெல்லாம் யூனிஃபார்மும், அடையாளஅட்டையும் தர உத்தரவிட்டு, திரும்பவும் தாம் இதுபோன்று தவறிழைக்காமல் பார்த்துக் கொண்டார்.
ஆம்! வெற்றியாளர்கள் சரியாக முடிவு எடுப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் உடனுக்குடன் முடிவெடுப்பவர்கள்.
எனவே, நீங்களும் விரைவாக முடிவெடுக்கப் பழகுங்கள்.
_ இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil
உங்கள் காருக்கு நீங்கள் டிரைவராக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது முதலாளியாக இருக்க விரும்புகிறீர்களா? Read More
இந்தக் கேள்வியை சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். உறுதியாக லாபமே தராத தொழில் என்று ஏதேனும் இருக்கிறதா… என்ன?
தொழிலாளி, முதலாளி ஆக முடியுமா..? இக்கேள்வி பலருக்கும் எழும் முக்கியமான ஒன்று. வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும்.
வேலையை உதறிவிட்டுத் தொழில் தொடங்கலாமா… அல்லது வேலையில் இருந்து கொண்டே தொழில் தொடங்கலாமா? இது அடுத்த கேள்வி. இந்தக் கேள்விகளுக்கு என்ன விடை?
உங்களில் எத்தனை பேர் கிங்க் வால் குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவதைத் கூர்ந்து பார்த்திருக்கிறீர்கள்? அது எடுத்தவுடன் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவி விடாது. முதலில் தன் வாலை அடுத்த மரத்துக் கிளையில் சுற்றிக்கொண்டு, தாம் விழ மாட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த பிறகே அந்த மரத்திற்குத் தாவும். இதற்கு ‘பற்றி விடுதல்’ என்று பெயர்.
இதுபோல் ‘விட்டுப் பற்றுதல்’ என்பதும் உண்டு. நாம் +2 முடித்த பிறகு கல்லூரிக்குச் செல்ல வேண்டும் அல்லவா? அப்பொழுது கல்லூரியில் சீட் கிடைத்தால் தான் நான் +2 முடிப்பேன் என்று அடம் பிடிக்க முடியுமா? இதேபோல் சில விஷயங்கள் கையை மீறி நடக்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில் ‘விட்டுப் பற்றுதல்’ சித்தாந்தம் தான் பொருத்தமாக இருக்கும்.
தொழிலைப் பொறுத்தவரையில் இரண்டும் சரியே. ஒரே வேறுபாடு என்னவென்றால் முன்னது பாதுகாப்பானது. பின்னது ‘த்ரில்’ லானது. அவ்வளவுதான். நடக்கப்போவது என்ன என்பதை அறியாமல், ஆற்றின் போக்கிலேயே போகும் இலை போல் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விடுவதும் ஒரு த்ரில் தானே !
தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கு, பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை உதறுவதற்கு முன், மனதில் பல பயங்களும் ஐய ங்களும் எழக்கூடும்.
இந்த வினாக்களுக்கு விடை தேடுகிற அதே வேலையில் கீழே உள்ள 10 ஆலோசனைகளையும் மனதில் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுப்பது என்பது நல்ல சிந்தனைதான். தமிழகத்தில் 7 கோடி பேர். இதில் 2 கோடி குழந்தைகள். இவர்களின் சென்னையில் மட்டும் குறைந்தது 25 லட்சம் பேர். இதில் வீட்டிலேயே கம்ப்யூட்டர் வைத்திருப்போர் இரண்டரை லட்சம் என்று கொண்டாலும், அதில் 2,500 பேர் கம்ப்யூட்டர் படிக்க ஆர்வம் காட்டுவார்கள். என்று ‘ரமணா’ படத்தில் வருவது போல புள்ளிவிவரம் எடுப்பது சிந்தனைக்கு சரி. இந்த சிந்தனைக்குத் தொழில் வடிவம் கொடுக்கும் நோக்கில் என். ஐ.ஐ.டி லெடா (NIITLeda), ஃபோர்த் ஆர் (Fourth R), ஐ.டி .கிட்ஸ் (IT Kids) எனப் பல நிறுவனங்கள் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை எல்லாமே தோல்வியுற்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மற்றொரு சான்று, அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஸ்கவுண்ட் கார்டுகள் ’ சில ஆண்டுகளுக்கு முன்னால் கிரெடிட் கார்டுகளை போல டிஸ்கவுண்ட் கார்டுகளையும் சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. நீங்கள் ரூ100 கொடுத்து அந்தக் கார்டை விலைக்கு வாங்கினால், உங்கள் நகரில் உள்ள சுமார் 100 கடைகளில் எல்லாப் பொருள்களையும் 5 % முதல் 15% வரை தள்ளுபடியில் வாங்கலாம். கார்ட் விற்பவருக்கும் லாபம்… வாங்கியவருக்கு தள்ளுபடியில் லாபம்… கடைக்காரருக்கு கூடுதல் விற்பனையால் லாபம் என்ற இந்தச் சிந்தனை கேட்பதற்கு புதுமையாக, நல்ல லாபம் தருவது போன்று இருந்தது. ஆனால்,நடைமுறைப்படுத்தப்பட்ட போது பெரும் தோல்வியையே சந்தித்தது.
சரி… அப்படியானால் எந்தச் சிந்தனையை வெற்றித் தரக்கூடிய தொழிலாக மாற்ற முடியும்? மேலைநாட்டு நிர்வாக நெறிப்படி, எந்த ஒரு சிந்தனை உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறதோ, வேலைப்பளுவைக் குறைக்கிறதோ, நேரத்தை மிச்சப்படுத்துகிறதோ, வசதியை அதிகரித்து தருகிறதோ… அவை எல்லாம் தொழில் வாய்ப்புள்ள சிந்தனைகள் ஆகும்.
அதாவது வாஷிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், மைக்ரோ வேவ் ஓவன், கம்ப்யூட்டர் போன்ற பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவை பயன்பாட்டாளரின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வேலைப் பளுவையும் குறைகின்றன. இதனால் இவை வெற்றிபெற்றன. ஏர்கண்டிஷனர். ரிசார்ட், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவையெல்லாம் மனிதர்களின் வசதிகளை அதிகரித்தமையால் வெற்றி பெற்றன.
இந்த ரீதியில் நீங்களும் யோசித்தால் உங்களது சிந்தனையையும் தொழிலாக மாற்ற இயலும்.
_ இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker