fbpx
கட்டளைகளுக்காக காத்திருக்காதீர்கள்!  | Don’t wait for commands!

Don't wait for commands
  • August 20, 2022

உங்கள் காருக்கு நீங்கள் டிரைவராக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது முதலாளியாக இருக்க விரும்புகிறீர்களா? 

இதிலென்ன சந்தேகம்? முதலாளியாக இருக்கவே விரும்புவேன் என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும் 

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் அப்படி இருப்பதில்லை. ஒரு டிரைவருக்கு எப்படி முதலாளியிடம் இருந்து கட்டளைகள் தேவைப்படுகிறதோ, அதுபோல் நாம் இயங்கவும் பிறரிடமிருந்து கட்டளைகள் தேலைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. 

ஆனால், வெற்றியாளர்கள் பிறரிடமிருந்து கட்டளைகளை எதிர்பார்ப்பதில்லை: அவர்கள் தம் மீது முழு நம்பிக்கை வைக்கிறார்கள் குறிப்பாகஅவர்கள் சுயமாக  எந்த முடிவை எடுத்தாலும், அதில் கடைசி வரை உறுதியாக இருக்கிறார்கள்இதுவே அவர்களது வெற்றிக்கு மிகப் பெரிய காரணம். 

எழுந்திருக்க வேண்டிய நேரத்திற்கு அலாரம் வைப்பதில் தொடங்கி பிறரிடம் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது வரை, அனைத்திலும் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். 

ஒருவேளை அவர்களால் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், உடன் அவர்களே வலியச் சென்று, வருத்தம் தெரிவித்து மாற்று ஏற்பாட்டிற்கு வழி செய்கிறார்கள், 

நீங்களும் வெற்றியாளராக வேண்டுமென்றால், எதையும் சொல்வதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். சொன்ன பின்பு, அதை நிறைவேற்றி கடுமையாக பாடுபட வேண்டும். 

வார்த்தைக்கும்,  வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாததொரு நிலையை நீங்கள் எட்ட வேண்டும் 

ஐபோன்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம், ‘அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி புது மாடல் போனை அறிமுகப்படுத்தப் போகிறோம்என்று சொல்லிவிட்டால், உலகமே தலைகீழாக மாறினாலும், சரியாக அந்த நாளில் அந்த போன் அறிமுகப்படுத்திவிடும். அந்த அளவிற்கு தம் மீதான நம்பசுத்தன்மையை வாடிக்கையாளர்கள் மத்தியில் உருவாக்கிய காரணத்தால்தான் இன்றைக்கு ஸ்மார்ட் போன் தயாரிப்பில் நம்பர்-1 ஆக அந்நிறுவனம் திகழ்கிறது 

குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் நம்பர்-1 ஆகத் திகழ வேண்டுமானால், யாருடைய கட்டளைகளுக்காகவும் காத்திராமால் சுயமாக முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்தி, அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். 

                                                          ————– இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu

Comments are closed.