fbpx
கேள்வி கேட்கத் தெரிந்தவரே, அறிவாளி | Those who question are wise

those who question are wise
  • June 25, 2026

முன்பெல்லாம் எந்தக் கேள்விக்கும் சிறந்த பதிலைச் சொல்பவர் தான் அறிவாளி என்று கருதப்படுவார்.

ஆனால், இது தகவல் யுகம். எல்லா பதில்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சரியான பதிலைப் பெறுவதற்கான, தகுந்த கேள்வியைக் கேட்கத் தெரிந்தவரே இனி அறிவாளி ஆவார்.

GOOGLE, YAHOO!, CHAT GPT போன்றவை எல்லாம் உங்களுக்கு பதில்களைத் தர காத்துக் கொண்டிருக்கின்றன. சரியான கேள்விகள் உங்களிடம் இருக்கின்றதா என்பது தான் தற்போதைய சவால்.

கேள்விகள் கேட்கிற போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ…

*உங்களுக்கு என்ன தேவை என்கிற தெளிவு வேண்டும்.

*முடிந்தால் இரு மொழிகளில் – ஆங்கிலத்திலும், தாய் மொழியினும் கேட்டுப் பார்க்கலாம்.

*கேள்விகளை முடிந்தவரை – மேலோட்டமாக அல்லாமல், துல்லியமாகக் கேட்க வேண்டும்.

உதாரணத்திற்கு, “நான் நாகர்கோவில் செல்ல வேண்டும. என்ன வழி ?” என்று கேட்டால், கூகுள் உங்களுக்கு ஒரு லட்சம் விடைகளைத் தரும்.

அதே நேரம், “நான் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு, 2000 ரூபாய் செலவில் செல்ல வேண்டும். என்ன வழி ?” என்று கேட்டால், கூகுள் உங்களுக்கு பத்தாயிரம் பதில்களை மட்டுமே தரும். அதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது, உங்கள் புத்திசாலித்தனம்.

ஆக, இனிமேல் அறிவாளி என்பவர் நல்ல விடைகளைத் தருபவர் அல்ல. நல்ல கேள்விகளைக் கேட்பவரே ஆவார்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.