Blogs
சிறுவன் ஒருவன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தை மிகவும் நேசித்தான். பல நூறு கிளைகளோடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது அந்த ஆப்பிள் மரம். இனிப்பான கனிகளைத் தந்து ஏக்கர் கணக்கில் பிரமாண்டமாக விரிந்திருந்த அம்மரத்துடன் விளையாடுவது சிறுவனுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.
மரத்தின் கிளைகளில் ஏறி, தினம் தினம் தனது உடல் வலிமையை அவன் வளர்த்துக் கொண்டான். சிறுவன் களைப்படையும் போதெல்லாம், தன்னிடம் இருக்கும் கனிகளை உதிர்க்கச் சொல்லி அவனுக்கு தெம்பூட்டும் அந்த மரம். அவன் ஒருநாள் தன்னுடன் விளையாட வராவிட்டாலும் மரம் ஏங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு பிடிப்பு ஏற்பட்டுப் போனது. சிறுவன் வளர்ந்தான். மேல்படிப்பு காலம் வந்தது. படிப்புச் செலவுக்கு பணம் இல்லையே!’ என்ற வாட்டத்தோடு தோட்டத்துப் பக்கம் வந்தான். மரம் அவனை அழைத்தது. பிரச்னையைக் கேட்டது. ‘இவ்வளவுதானா…? நான் விளைவித்திருக்கும் கனிகளை எல்லாம் உலுக்கி உதிர்த்து விடு. நான் வேகமாக புதிய கனிகளை உற்பத்தி செய்கிறேன். ஒரு வாரத்தில் உன் பணத்தேவையை இப்பழங்கள் பூர்த்தி செய்யும்…’ என்றது. சிறுவன் அப்படியே செய்து, படிப்புக்குப் பணம் கட்டி விட்டான்.
நாட்கள் நகர்ந்தன. இளைஞனுக்கு நல்ல வேலை கிடைத்து, சம்பாதிக்கத் தொடங்கினான். அவனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. கடைசி நேரத்தில் பணப்பிரச்னை எழ.. எப்போதும் தனக்குஆறுதலாக இருக்கும் ஆப்பிள் மரத்தை நோக்கி நடந்தான் இளைஞன். ‘கல்யாண மாப்பிள்ளை கலங்கலாமா…? எனது இடது பக்க கிளைகளை வெட்டி எடுத்தால், பல லாரி மரம் கிடைக்கும். அதைக் கொண்டு ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்! என்றது மரம்.
நல்லபடியாகத் திருமணம் முடிந்தது.
காலம் கடந்தது. இளைஞனுக்கு இரு பிள்ளைகள். அவர்களுடன் வந்து ஆப்பிள் மரத்துடன் விளையாடுவான் இளைஞன். இந்நிலையில் அவனது மனைவிக்கு உடலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அறுவை காரண சிகிச்சைக்கு பெரும் செலவு. கையைப் பிசைந்த நிலையில், மரம் புதியதொரு யோசனை சொன்னது. ‘வலது பக்க கிளைகளை வெட்டி எடுத்துச் செல்! இளைஞனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை கண்கள் பணிக்க, ஒப்புக் கொண்டான். மனைவி பிழைத்தாள்.
இந்நிலையில், இளைஞனுக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து, அவன் அங்கேயே சென்று சில வருடங்கள் சென்று பணியாற்றினான் கைநிறைய சம்பளம். வசதி வாய்ப்பு. குழந்தைகளுக்கு நிறைய பரிசுப் பொருட்களோடு வந்திறங்கினான். மகிழ்ச்சியான வாழ்க்கை இறைவனுக்கு நன்றி சொன்னபடியே தோட்டத்துப் பக்கம் போனால் கிளைகளற்று நின்ற மரம் லேசாகப் பட்டுப் போகத் தொடங்கியிருந்தது. பராமரிப்புக்கான அறிகுறியும் இல்லை. மெதுவாக அதன் அருகில் போனான். ஆப்பிள் மரத்திடம் லேசான சிலிர்ப்பு. ‘கண்ணா! வந்து விட்டாயா.? எத்தனை நாளாயிற்று உன்னைப் பார்த்து” என்றது. “எப்படி பூத்துக் குலுங்கிய நீ இப்படி கட்டை மரமாகி விட்டாயே எனக்காக உன்னையே நீ இழந்து விட்டாயே!” என்று கண்ணீர் சிந்தினான் இளைஞன். “அதனால் என்ன… நீ என்னுடன் விளையாட வந்தால், அதுவே போதும் இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்.!” என்றது மரம்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோரும் நமது வளர்ச்சிக்கு உதவியவர்களும் இப்படித்தான் தன்னலம் இன்றி இருக்கின்றனர். அவர்களை நன்றியுடன் நினைத்துப் பார்த்து, அவ்வப்போது சந்தித்து வத்தாலே அதைவிட சிறந்த ஆசீர்வாதம் ஏதும் இருக்காது.
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu
மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள். நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்பட ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். Read More
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்டுச் சென்றார். “சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா? என்று விற்பனை நிலைய மேலாளர் கேட்க,
“நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்” என்றார் நம்ம ஆள். “அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் என்று ரிப்போர்ட் தர வேண்டும்” என்று கூறி பணிக்கு அனுமதித்தார். முதல் நாள் கடை மூடும் நேரத்தில் வந்தார் மேலாளர்.
‘இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?”
“ஒருவரிடம் மட்டும்தான்!” “என்ன ஒருத்தர் மட்டுமா? ம்ஹூம் உன்னை நீ இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும் உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20 லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள் உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும்
அவர்களைப் போல் மாற முயற்சிக்க வேண்டும். சரி எத்தனை டாலருக்கு வியாபாரம் செய்தாய்?”
“$10,12,347.64”
ஒரே ஒரு நபரிடம் பத்து லட்சம் டாவருக்கு மேல் விற்பனையா..? அப்படி என்ன விற்றாய்?”
முதலில் அவரிடம் சிறிய தூண்டில் விற்றேன் பிறகு கொஞ் பெரிய தூண்டில் அதைவிடப் பெரிய தூண்டில், ஃபிஷ்ஷிங் ராட், ஃபிஷ்ஷிங் கியர் எல்லாம் விற்றேன்…” என்ன அவ்வளவு பெரிய மீன் பிடிப் பிரியரா..? பலே.. பலே.. அப்புறம்..?”
அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு படகைக் காட்டினேன். அது அவருக்குப் பிடித்துப் போனது. அவர் ‘என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா?” என்று தெரியவில்லையே என்றார்.
நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு நான்குக்கு 4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் ‘நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்? எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவரிடம் 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள டெண்ட்டையும் விற்றேன்.” “நீ குப்பரான ஆள்தான். ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடம் இவ்வளவு விற்றுள்ளாயே!” விற்பனைப்
பிரிவு மேலாளர் அதிர்ச்சியும் திகைப்புமாக நம்மாளைப் பாராட்டினார். “அய்யோ, இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்கு தலைவலியே வராது என்று கூறினேன். அப்புறந்தான் இவற்றையெல்லாம் வாங்கினார்.”
எந்த ஒரு வேலையிலுமே ஈர்ப்பும் பிடிப்பும் இன்னும் இன்னும் மேலே என்னும் எதிர்பார்ப்பும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்… எத்தனை உயரம் வேண்டுமானாலும் போக முடியும் !
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil nadu
ஆல்ப்ஸ் மலையிலேயே ஐஸ் விற்பது, அண்டார்டிக்காவில் ஏ.சி விற்பது என்று மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். திறமை இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம். Read More
ஒரு அரசன், சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். Read More
அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை அம்பு வேலைப் பயன்படுத்தாமல் Read More