சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு பேசச் சென்றிருந்தேன். நான் பேசி முடித்து மேடையை விட்டுக் கீழே இறங்கியவுடன், ஒரு நடுத்தர வயது அம்மையார் என்னிடம் தன் வருத்தங்களைக் கொட்டினார்.
*நான் ஊறுகாய், வத்தல், வடகம், மசாலாப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்து விற்று வருகிறேன். முன்பெல்லாம் இந்த வியாபாரம் நன்றாக இருந்தது. லாபமும் அதிகம் இருந்தது. தற்போது இந்த வியாபாரம் குறைந்து கொண்டே வருகிறது. என்ன செய்வது ?” என்று கேட்டார், வருத்தமாக.
உண்மைதான். இந்த B2C (Business to Consumer) எனப்படும் வாடிக்கையாளர்களுக்கான வணிகத்தில் பிராண்டிங் (BRANDING)கின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. பிராண்டட் பொருள்களை வாங்குவதையே மக்கள் அதிகம் விரும்பத் தொடங்கி வட்டார்கள். மேலும் இந்தப் பொருள்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதால், இவற்றைக் குறைந்த விலைக்கு விற்க அவர்களால் முடிகிறது. மேலும் ஆஃபர்களையும் வழங்கி விற்பனையைப் பெருக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதனால் போட்டியாளர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இவை அனைத்தும் தற்போது அமேசான் போன்ற இ-காமர்ஸ் வலைதளங்களிலும் குறைந்த விலைகளில் எளிதாகக் கிடைக்கிறது.
எனவே பெண்கள் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதிதாகத் தொழில் தொடங்க விரும்புவோர், இனி பிராண்டிங் விழிப்புணர்வு அதிகம் இல்லாத ஆர்கானிக் பொருள்கள், ஹோம் டியூஷன், டெய்லரிங் போன்ற துறைகளில் கால் பதிக்கலாம்.
இல்லையெனில் தொழில்நுட்பம் சார்ந்த சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், ஹெச். ஆர். ரெக்ரூட்டிங் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தலாம்.
காலம் மாற, மாற நாமும் மாறித்தானே ஆக வேண்டும். நம்மை நோக்கி மக்கள் வராவிட்டால், மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை நாம் விற்க முன்வர வேண்டும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in Tamil Nadu