fbpx
உங்கள் கணவரை ஊக்கப்படுத்தும் மூன்று மந்திரச் சொற்கள் | Three Magic Words to Encourage Your Husband

உங்கள் கணவரை ஊக்கப்படுத்தும் மூன்று மந்திரச் சொற்கள்
  • May 25, 2026

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்றார் கவிஞர் பாரதிதாசன். அதாவது அந்தக் காலத்தில் பெண்கள் கடைப் பார்வையைக் காட்டி விட்டாலே, ஆண்கள் மிகவும் ஊக்கம் பெற்று மிகப்பெரிய செயலையும் எளிதாகச் செய்து முடித்து விடுவார்களாம்.

ஆனால், பின்னாளில் வந்த – MEN ARE FROM MARS, WOMEN ARE FROM VENUS என்ற நூலின் ஆசிரியர் டாக்டர் ஜான் கிரே, “ஆண்களை ஊக்கப்படுத்துவதற்கு மூன்று சொற்கள் போதும்” என்று சொன்னார். அவை என்ன ?

THAT MAKE SENSE

பெண்கள் கணவரோடு விவாதம் புரிந்து கொண்டிருக்கிற போது, இடையில், “ஆம் ! நீங்கள் சொல்வதிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது” என்று சொன்னால் போதுமாம். ஆண்கள் மிகவும் ஊக்கம் பெறுவார்களாம்.

GOOD IDEA

அதுபோல் உண்மையிலேயே அவர்கள் சிறந்த சிந்தனைகளைப் பகிர்கிறபோது, அவர்களைத் தட்டிக் கொடுக்கும் விதமாக “இது மிகச் சிறந்த ஐடியா” என்று சொல்ல வேண்டுமாம்.

YOU ARE RIGHT

“நானும் பலமுறை யோசித்துப் பார்த்து விட்டேன். நீங்கள் சொல்வது தான் மிகச் சரியானது” என்று சொன்னால், ஆண்கள் மிக மிக உற்சாகம் பெற்று, எவ்வளவு பெரிய காரியத்தையும், மகிழ்ச்சியோடு சுலபமாக செய்து முடிப்பார்களாம்.

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால், இவற்றை எல்லா நேரங்களிலும் பயன்படுத்தக் கூடாது; பொருத்தம் இல்லாத இடங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்பது தான்.

“அதாவது, அவர்களை ஐஸ் வைத்து உங்கள் காரியத்தை சாதிக்க நினைக்காதீர்கள். அதை ஆண்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.

மாறாக, சரியான நேரத்தில், சரியான முறையில், இந்த மந்திரச் சொற்களைப் பயன்படுத்தினால், ஆண்கள் உற்சாகம் பெற்று காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்… உங்களையும் மிகவும் நேசிப்பார்கள்” என்கிறார், டாக்டர் ஜான் கிரே.

முயற்சித்துப் பாருங்களேன் !

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.