fbpx
Archive for month

March, 2023

வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள் | Don’t get into an argument
tamil motivational speaker
  • March 31, 2023

பணக்காரர்கள் என்றைக்காவது நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பார்த்திருக்க முடியாது. Read More

Increase working hours!
tamil motivational speaker
  • March 25, 2023

நாள்தோறும் பணம் சம்பாதிக்க எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்? நீங்கள் 8 மணி நேரம் செலவழிப்பவராக இருந்தால் கூடுதலாக 4 மணி நேரம் செலவழிக்க முயற்சியுங்கள். Read More

கடிகாரத்தை 10 நிமிடம் கூடுதலாக வைக்காதீர்கள்! | Do not set your clock 10 minutes ahead
motivational speaker in tamil
  • March 18, 2023

அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களைப் பார்ப்போம்.

காலை எழுவதற்காக அலாரம் வைத்துவிட்டு, அது அடித்தவுடன் நிறுத்திவிட்டு திரும்பவும் புரண்டு படுப்பவரா நீங்கள்? Read More

வருமான வழிகளை அதிகப்படுத்தலாமே! | Increase income streams!
motivational speaker in tamil
  • March 11, 2023

வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம், அவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க ஒரு வழியை மட்டுமே நம்பியிருக்காமல் பல வழிகளை உருவாக்குகிறாரகள் என்பதுதான். Read More

எதில் நேரத்தை செலவழிக்கிறீர்களோ அதுவே வளரும்! | What you spend time on will grow!
best motivational speaker in tamil nadu
  • March 4, 2023

வெற்றியாளர்கள், யார் எது சொன்னாலும் ‘ஓ.கே., ஓ.கே. என்று ஒப்புக்கொண்டு தமது நேரத்தை செலவழிக்க மாட்டார்கள் தாம் பயணித்துக் கொண்டிருக்கும் இலக்கிற்கு முற்றிலும் மாறான எந்த வாய்ப்பு வந்தாலும், அதற்கு அவர்கள் ‘நோ’ சொல்லி விடுவார்கள்.

ஆனால், நம்மைப் போன்றோர், ‘முடியாது’ என்று சொன்னால் பிறர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று எண்ணி பல வேலைகளை தவிர்க்கத் தெரியாமல், ஒப்புக் கொள்கிறோம்.

குறிப்பாக, நமக்கு சம்பந்தம் இல்லாத துறைகளில் வாய்ப்புகள் இல்லாதோருக்கெல்லாம் வலியச் சென்று உதவுவது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

வருகிற வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது, கூட்டமில்லை என்பதற்காக வேறு திசையில் செல்லும் பேருந்தில் ஏறுவதற்கு சமம். நமக்கு செல்ல வேண்டிய இடம்தான் முக்கியமே தவிர, கூட்டம் அல்ல.

சரி… பிறருக்கு உதவுவதும், பொதுக் காரியங்களில் ஈடுபடுவதும் தவறா? என்று நீங்கள் கேட்கக் கூடும்.

நாம் அப்படி சொல்ல வரவில்லை.முதலில் உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கித்துவம் கொடுங்கள். பிறகு உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கக்கூடிய அல்லது உங்கள் முன்னேற்றம் சார்ந்த பொதுக் காரியங்களில் ஈடுபடுங்கள்.

உங்கள் இலக்கை அடைய உங்களுக்கு நேரமும், சக்தியும் அதிகம் தேவை. பணத்தைவிட இவைதான் முக்கியம். எனவே, நேரத்தையும், சக்தியையும் அளவறிந்து பயன்படுத்துங்கள். உங்கள் இலக்கை நோக்கி நீங்களே ஓடவில்லையென்றால், பிறகு யார் ஓடுவார்? பிறருக்காக ஓடி, ஓடி உழைத்து கொண்டே இருந்தால், நீங்கள் எப்படி வெற்றி பெறுவீர்கள்?

நீங்கள் எதில் நேரம் செலவழிக்கிறீர்களோ அதுவே வளரும் அது. பொதுக்காரியமாக இருந்தாலும் சரி; உங்கள் சொந்த வேலையாக இருந்தாலும் சரி.

அதாவது நீங்கள் நாள்தோறும் உங்கள் குடும்பத்திற்கு அதிக நேரம் செலவழித்தால் உங்கள் குடும்ப உறவு மேம்படும்.

ஒருவேளை, உங்கள் நண்பர்களோடு அதிக நேரத்தைச் செலவழித்தால் நட்பு வளம் பெரும்.

மதுக்கடைகளிலும், கிளப்புகளிலும் உட்கார்ந்து வீண்விவாதம் புரிந்தால் சண்டையும், மனஸ்தாபமும் வளரும்.

உடற்பயிற்சிக்கு அதிக நேரம் செலவழித்தால் உடல்நலம் சிறக்கும்.

தொழிலில் அதிக நேரம் செலவழித்தால் தொழில் வளர்ச்சி அடைந்து பணம் பெருகும்.

இந்த உண்மையை பணக்காரர்கள் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.

 

– இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu