November, 2022
மாபெரும் எழுத்தாளர் சாக்ரட்டீஸிடம் ஒரு இளைஞன் வெற்றியின் ரகசியத்தைக் கேட்டான். சாக்ரட்டீஸும் அவனை மறுநாள் காலையில் அந்த ஊரில் உள்ள பிரபலமான ஆற்றங்கரைக்கு வரச் சொன்னார். Read More
வானில் பறக்கும் ஏரோபிளேனைக் கண்டுபிடிப்பதற்காக 1900ஆவது ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானி சாமுவேல் லாங்லி (Samuel Langley) மாபெரும் திட்டத்தை வடிவமைத்தார். Read More
ஒருவர் இந்தியாவில் இருந்து கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று காலியான இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
நம்முடைய இலக்கைப் பற்றி திரும்பத் திரும்ப பேசி சுற்றத்தாரையும் நம்ப வைக்க வேண்டும். அது அவர்கள் மூலமாக பிறருக்கும் பரவி, நம் இலக்கு சார்ந்த ஆர்வமுள்ள மனிதர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
உதாரணத்திற்கு உங்களுக்குத் தெரிந்த ஒரு மாணவர், ‘நான் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புகிறேன்‘ என்று உங்களிடம் சொன்னால், நீங்கள் உடனே ஒரு ஐ.ஐ.டி. பேராசிரியரையோ அல்லது ஐ.ஐ.டி. மாணவரையோ அல்லது பயிற்சி மையத்தையோ பரிந்துரைத்து, அவருக்கு உதவுவீர்கள். அதன் மூலம் அம்மாணவர் தன் இலக்கை அடைவதற்கான அடுத்த நிலைக்குச் செல்வார்.
தொழில் தொடங்க ஒருவருக்கு 10 வட்சம் ரூபாய் முதலீடாகத் தேவைப்பட்டது. அவர் ஒரு வங்கியை நாடி கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். ‘இதோ, அதோ‘ என்று கடன் தராமல் மூன்று மாதங்களைக் கடத்தி விட்டது வங்கி. இவர் சற்றும் அசராமல் தனது நண்பர்கள். உற்றார் உறவினர்களிடம், தலா ரூபாய் 50 ஆயிரம் என 20 பேரை பங்குதாரராகச் சேர்த்து அந்தத் தொழிலைத் தொடங்கி, இன்றைக்கு சைக்கிள்களுக்கான மூலப்பொருள் உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறார்.
இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் நீங்கள் பார்க்கிற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில்கூட ரன் ரேட் கணக்கிடப்படுவதும் வெற்றியை எளிமையாக்குவதற்காகத்தான். 50 ஓவர்களில் 300 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதைவிட, ஒரு பந்துக்கு ஒரு ரன் என்று வைத்துக் கொண்டால் இலக்கைக் கண்டு மலைக்காமல் எளிமையாக அடைய முடியும்.
நினைவில் கொள்ளுங்கள் மிகப் பெரிய பயணங்கள்கூட சிறுசிறு அடிகளாகத்தான் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே மலைத்துப் போய் நின்று கொண்டே இருப்பதைவிட சென்று கொண்டே இருப்பது மேல். எனவே, தயங்காமல் பிறரிடம் கேளுங்கள்! வெற்றி கைவசப்படும்.
– – இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker