Tamil Motivational Articles
ஒருநாள் முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவேமக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்கப் பட்டிருந்தார்கள்.
ஒரு பெண் குழந்தை இரவு படுக்கப் போகும் முன் தினமும் சிறிது நேரம் கடவுளை கண் மூடி வேண்டுவாள். ‘கடவுளே என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி எல்லோரையும் ‘குஷியாக வை‘ என்று வேண்டுவாள்.
சிலர் எதற்கெடுத்தாலும் அதிர்ச்சி காட்டுவார்கள் பார்த்திருக்கிறீர்களா…? சிலர் ஏதாவது ஒன்றைச் சொன்னால், அதில் ஆயிரத்தெட்டு அர்த்தம் கண்டுபிடிப்பதிலேயே சிந்தனை வயப்படுவார்கள், கவனித்திருக்கிறீர்களா…?
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் வாடகை டாக்ஸி பிடித்தனர் இரண்டு தென்னிந்திய இளைஞர்கள். டாக்ஸி ஓட்டுநரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.
வாழ்க்கையில் சோர்வு என்பது கூடவே கூடாது. இந்தி எழுத்தாளர் பிரேம் சந்த், ‘ஒரு விளக்கின் கடமை வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலமும் அது ஒளி வீசிக்கொண்டுதான் இருக்கும்.
“வாங்க…பழகலாம்” என்பார் சாலமன் பாப்பையா. அதன் பின்னணியில் மிகப்பெரிய தத்துவமே அடங்கி இருக்கிறது. நாம் எதையும் பிறப்பில் கொண்டு வந்தவர்களில்லை. எல்லாமே வந்து பழகியவைதான். நல்ல பழக்கங்களை, வெற்றிக்கான வழிகளைப் பழகிக் கொண்டால்,
மொக்கைச்சாமி என்பவன், கடவுளை நோக்கி கடுந்தவம் இருந்தான் கடவுள் தோன்றினார். என்ன வரம் வேண்டும்”னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னாளாம். ‘கடவுளே. எதிரிகளின் அச்சுறுத்தல் ஏராளமாக உள்ளது.
காட்டில் ஒரு குரு இருந்தார். அவரைத் தேடி வந்த சிஷ்ய பக்தன், “எந்நேரமும் சிந்தனை வயப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். மூளை ஓய்வே கொள்ள மாட்டேன் என்கிறது..” என்றான். *நல்ல விஷயம்தானே! புதிய கண்டுபிடிப்புகளுக்கு அச்சிந்தனையைப் பயன்படுத்த வேண்டியதுதானே!” என்றார் குரு.
ராஜாவுக்கும் அவரது மகளுக்குமான ‘ஈகோ’ போட்டி பற்றிய கதை இது. ஒரு நாட்டின் வீரத் தளபதிக்கும், அழகு இளவரசிக்கும் இடையே காதல் மலர்கிறது. இது ராஜாவின் காதுக்குப் போகிறது. இவர்களின் காதலை விரும்பாத அரசர்,
தோற்றபின் ஒருவரது தோல்வி மட்டுமல்ல… எல்லாமே விமர்சிக்கப்படுகிறது. தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத்தானே தவிர, இலக்குகளை அல்ல.! ஒரு காரியத்தை ஆண் பார்க்கிற பார்வையும் பெண் பார்க்கிற பார்வையும் வேறுபடும். இது பல குடும்பங்களில் நடக்கிற சங்கதிதான் என்றாலும், சும்மா ஒருமுறை அசைபோட்டுப் பார்ப்போம். ஒரு ஆண் குடும்பத்தைக்கூட இரண்டாம்பட்சமாக எண்ணி,கடுமையாக உழைத்தால், “பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்”னு மட்டம் தட்டுவாங்க. இதுவே, பொண்டாட்டியைக் கவனிச்சுக்கிட்டா… “சம்பாதிக்கிறானோ இல்லையோ, அவளையே சுத்திச் சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பய”ன்னு கட்டம் கட்டுவாங்க.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்டன்னு கௌப்பி விடுவாங்க. கண்டுக்காமப் போனா ‘அழகை ரசிக்கத் தெரியாத […]
இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர்.
வேட்டைக்குச் சென்ற இளவரசரைக் காணவில்லை. நாடே அமளிதுமளிப் பட்டது. வேட்டைக்குச் சென்ற காட்டை நோக்கி ஆளாளுக்குத் தேடிச் சென்றனர்.
தொழிலதிபர் ஒருவர் புதிய கண்டுபிடிப்புகள் எதுவாயினும் அதனை வாங்கிப் பயன்படுத்தும் ஆர்வம் கொண்டவர். புத்திசாலி ரோபோ ஒன்று சந்தையில் கிடைப்பதை அறிந்து,
நேர்மையாக, சிறப்பான முடிவுகள் எடுப்பதுகூட பல நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வளர்த்துவிடும். இது, இன்று நேற்றல்ல.. பல நூற்றாண்டுகளாகவே தொடரும் கதைதான்.
முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அவர்மேல் சுற்றுப்பட்டு கிராம மக்கள் மிகுந்த பாசத்துடன் இருந்தனர். ‘சாமியின் வரவால், கிராமமே செழிப்பாக இருக்கிறது!’ என்பது அவர்களின் நம்பிக்கை. ஒருநாள், அவர் நித்திரையில் இருந்தபோது, ஆசிரமக் கதவு தடதடவென தட்டப்பட்டது. நித்திரை கலைந்த கோபத்தில் கதவைத் திறந்தவர், ஒரு மாடு மேய்ப்பவன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தார். ‘என்ன சங்கதி.?’ என்றார். “சாமீ…ஆத்துல வெள்ளம் வருதுங்க..! அதான் தகவல் சொல்லலாம்னு வந்தேன்!” என்றான். கோபுத்தில் இருந்த சாமி, ‘அதையேன் என்னிடம் சொல்கிறாய்…உனக்குப் பயமாக […]
அதிகம் பேசாதவனை, உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பின்னடைவைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ள வெற்றி வாய்ப்பினைப் பார்க்கிறான். எதற்கு இப்படி இரண்டு பஞ்ச் டயலாக் என்று பார்க்கிறீர்களா… வெற்றியாளர்களுக்குத் தேவையான அடிப்படை இது. மார்க்கெட்டிங் துறை இதற்கு நல்ல உதாரணம். புதிதாக புரோட்டா மெஷின் ஒன்றை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார்கள். மைதா மாவு நமது இயல்பான உணவு அல்ல. ஆனால், மாதமொருமுறையாவது அனைவரும் புரோட்டா சாப்பிடுகிறார்கள். அதை மென்மையாக வடிவமைக்கப் பலருக்கும் கைவரவில்லை என்பதால், இந்த மெஷினை மக்கள் விரும்புவார்கள் என்பது நிறுவனத்தின் நோக்கம். இதை […]
கரப்பான் பூச்சிக்கு எலியக் கண்டா பயம்…! எலிக்கு பூனையக் கண்டா பயம்…! பூனைக்கு நாயக் கண்டா பயம்…! நாய்க்கு மனுஷனைக் கண்டா பயம்…!
ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார். அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே அவரது இலக்காக இருந்தது.
ஒரு ஊரில், ஒரு முனிவர் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க 4 பேர் வந்தனர். அந்த 4 பேரும் முனிவரிடம், “சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே! அதுக்கு என்ன வழி?”ன்னு கேட்டாங்க.
டூட்டி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, ‘அடப்பாவமே!’ என்றிருக்கும்.
25 ஆயிரம் ரூபாயில் தொழில் தொடங்கி அதை தனது காலத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றிக் காட்டினார் திருபாய் அம்பானி. அவரது புத்திசாலித்தனம், தொழில் நேர்த்தி, செய்யும் வேலையில் ஒரு ஒழுங்கு, தன்னைப் போலவே பிறரும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்று பலருக்கும் கற்றுக் கொடுத்தது ஆகியவையே அவரது வெற்றிக்குக் காரணம். பொதுவாக முதல் தலைமுறையில் சம்பாதித்த சொத்துக்களை அடுத்த தலைமுறையில் வருவோர் அழித்து விடுவது உண்டு. ஆனால், திருபாயின் மகனாக வந்து அம்பானியின் தொழிலை நிர்வகிக்கத் தொடங்கிய இரு சகோதரர்களும், 60 ஆயிரம் கோடி ரூபாய்த் தொழிலை இன்று 6 லட்சம் கோடி ரூபாயாக தூக்கி நிறுத்தி விட்டனர். காரணம், அவர்களிடம் இருந்த […]
கருப்பிராயத்தில் ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகளே வளர்ந்து, தந்தூரி சிக்கனாகின்றன. எதற்காக இந்த ஜோக் என்று பார்க்கிறீர்களா?
மன்னர்களுக்கு எப்போதுமே ஏதாவது ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருக்கும், அதை அவையில் இருப்போர் தீர்த்து வைத்ததும் மெகா சீரியல் போன்ற ஒன்றுதான்.
ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அது, ‘நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர்.
சிறுவன் ஒருவன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தை மிகவும் நேசித்தான். பல நூறு கிளைகளோடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது அந்த ஆப்பிள் மரம்.
மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள். நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்பட ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள்.
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில் வேலை கேட்டுச் சென்றார். “சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா? என்று விற்பனை நிலைய மேலாளர் கேட்க, “நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்” என்றார் நம்ம ஆள். “அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் என்று ரிப்போர்ட் தர வேண்டும்” என்று கூறி பணிக்கு அனுமதித்தார். முதல் நாள் கடை மூடும் நேரத்தில் வந்தார் மேலாளர். ‘இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?” “ஒருவரிடம் மட்டும்தான்!” “என்ன ஒருத்தர் மட்டுமா? […]
ஆல்ப்ஸ் மலையிலேயே ஐஸ் விற்பது, அண்டார்டிக்காவில் ஏ.சி விற்பது என்று மார்க்கெட்டிங் டெக்னிக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். திறமை இருந்தால் எதையும் எப்படியும் சாதிக்கலாம்.
ஒரு அரசன், சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.
அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை அம்பு வேலைப் பயன்படுத்தாமல்
கோயிலுக்குப் பக்கத்தில் மதுக்கடை திறந்தால், கொந்தளித்துப் போவார்கள் என்பது அறிந்ததே! மதுக்கடை லைசென்ஸ் பெற்ற ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.
வெட்டி அரட்டை அடிக்கும் டீக்கடை அது. அதன் உரிமையாளர் தன் வாடிக்கையாளரிடம் வம்பளந்து கொண்டிருந்தார். “இந்த நாட்ல லூசுப் பசங்க ஜாஸ்தி
ஒரு நாள் ஒரு மரம் வெட்டி ஆற்றின் மேல் நீட்டிக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான் தவறி அவனது கோடரி ஆற்றில் விழுந்துவிட்டது. கோடரி போய்விட்டதே என்று அவன் அழுத போது,
ஊரெல்லாம் மழை, கொசுக்களுக்கு கொண்டாட்டம். கூட்டமாக கும்மியடித்தன. புதிய தலைமுறைக்கு பறக்கும் பிராக்டீஸ் நடைபெற்றது. முதல் முறையாக பல்வேறு வீடுகளுக்குள் பறந்து சென்ற குட்டிக் கொசு,
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்!
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான சண்டை. வாக்குவாதம் முற்றிவிட்டது. “நீயெல்லாம் இருந்து என்ன ஆகப்போகிறது.
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.
ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் சில தவறுகளால் ரூ.50 கோடி தஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் நிறுவனத் தலைவர்.
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் யாரிடம் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைப்பது என்று குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. நமக்கு மிக நெருங்கிய பணக்கார நண்பர் ஒருவரை அழைத்து ஆலோசனை கேட்டார்.
களிமண், பஞ்சு, சர்க்கரை, என மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு. பிரச்சனை என்கிற தண்ணீர் பட்டவுடன் இறுகிப் போகிறவர்கள் களிமண் மனிதர்கள், அவர்கள் பிரச்சனைகளை மீறி சிந்திப்பதில்லை; பிரச்சனைகளும் அவர்களை விட்டு விலகுவதில்லை.
‘நான் ரொம்ப பிஸி’ என்று சொல்ற ரகமா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது!
“ஒரு காலத்தில் நாங்கள் இந்த ஊரில் ஜமீன்தாரராக வாழ்ந்தோம்” என்று பழம்பெருமை பேசிக்கொண்டு இருப்பவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
ஒரு விவசாயி தன்னுடைய வயலில் புதிதாக பயிர்விட்ட சோளத்தை சில கொக்குகள் சேதப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அன்று மாலையே ஒரு வலையை விரித்துவிட்டு வீட்டிற்குச் சென்றார்.
ஒருவர் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வருகிறாரோ அவரே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், உண்மைநிலை இப்படியிருக்க. பெரும்பாலானோருக்கு பிரச்சனை என்றாலே தயக்கம் ஏற்பட்டு விடுகிறது.
நம் பலரிடையே உள்ள ஒரு முக்கிய பழக்கம் என்னவென்றால், நல்ல நேரத்திற்காக காத்திருந்து உள்ள நேரத்தையும் வீணாக்குவது. பொதுவாக பணக்காரர்கள் நல்ல நேரத்திற்காகக் காத்திருப்பதில்லை. நல்ல வேலை செய்வது என்று தீர்மானித்துவிட்டால், அதற்கு நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை. இதுதான் அவர்கள் பாலிசி.
பணக்காரர்கள் என்றைக்காவது நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க முடியாது.
நாள்தோறும் பணம் சம்பாதிக்க எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்? நீங்கள் 8 மணி நேரம் செலவழிப்பவராக இருந்தால் கூடுதலாக 4 மணி நேரம் செலவழிக்க முயற்சியுங்கள்.
அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களைப் பார்ப்போம். காலை எழுவதற்காக அலாரம் வைத்துவிட்டு, அது அடித்தவுடன் நிறுத்திவிட்டு திரும்பவும் புரண்டு படுப்பவரா நீங்கள்?
வெற்றியாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம், அவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க ஒரு வழியை மட்டுமே நம்பியிருக்காமல் பல வழிகளை உருவாக்குகிறாரகள் என்பதுதான்.
வெற்றியாளர்கள், யார் எது சொன்னாலும் ‘ஓ.கே., ஓ.கே. என்று ஒப்புக்கொண்டு தமது நேரத்தை செலவழிக்க மாட்டார்கள் தாம் பயணித்துக் கொண்டிருக்கும் இலக்கிற்கு முற்றிலும் மாறான எந்த வாய்ப்பு வந்தாலும், அதற்கு அவர்கள் ‘நோ’ சொல்லி விடுவார்கள். ஆனால், நம்மைப் போன்றோர், ‘முடியாது’ என்று சொன்னால் பிறர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்று எண்ணி பல வேலைகளை தவிர்க்கத் தெரியாமல், ஒப்புக் கொள்கிறோம். குறிப்பாக, நமக்கு சம்பந்தம் இல்லாத துறைகளில் வாய்ப்புகள் இல்லாதோருக்கெல்லாம் வலியச் சென்று உதவுவது, பொதுக் காரியங்களில் ஈடுபடுவது போன்றவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். வருகிற வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது, கூட்டமில்லை என்பதற்காக வேறு திசையில் செல்லும் பேருந்தில் ஏறுவதற்கு சமம். […]
பணம் முக்கியாமா? நேரம் முக்கியமா? என்ற கேள்விக்கு பணத்தைவிட நேரமே முக்கியம் என்று நாம் கூறுவதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை.
வெற்றியாளர்கள் பணத்தைவிட, நேரத்தை மிச்சப்படுத்துவதிலேயே அதிக கவனத்தோடு இருக்கிறார்கள். ஏன் தெரியுமா? கல்லூரிப் பேராசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் வசிக்கும் இயர்ல் (Earl) என்பவர், தனது மனைவி ஜோஸ்பின் டிக்சனுக்கு (Josephine Dickinson), வீட்டில் ஏற்படும் சிறு காயங்களை குணப்படுத்துவதற்காக
பணக்காரர்களின் பலம் என்னவென்றால், அவர்கள் சின்ன விஷயங்களைக்கூட நுணுக்கமாகத் திட்டமிடுவதுதான்.
ஒரு பெரிய தொழிலதிபரைப் பார்க்க, “இரவு 7 மணி போல் வரட்டுமா?” என்று கேட்டோம். “7 முதல் 7.30 மணி வரை Think Tink நேரம். அதனால் 730 மணிக்குப்பிறகு வாருங்கள்” என்றார். ‘’அதென்ன Think Tink?’’ என்று ஆச்சரியப்பட்டு கேட்டோம்.
‘டார்கெட் டேட்டா‘ (Target Data), ‘டேஷ் போர்ட் டேட்டா (Dash Board Data) – இந்த இரண்டு பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
ஒரு விறகுவெட்டி நாள்தோறும் 20 கிலோ எடையுள்ள மரத்தின் விறகுகளை வெட்டுவது வழக்கம். நாள் செல்லச் செல்ல அவன் வெட்டும் மரங்களின் அளவு குறையத் தொடங்கி நாள் ஒன்றுக்கு 15 கிலோ, 10 கிலோ, 5 கிலோ என சரிந்து கொண்டே வந்தது.
முடிவுகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று, கொள்கை ரீதியான முடிவுகள் (Policy Decisions). இரண்டாவது, அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது தொடர்பான முடிவுகள் (Executing Decisions). உதாரணத்திற்கு, கார் வாங்குதல் என்பது கொள்கை முடிவு. எந்த மாடல் கார், என்ன விலையில், எப்போது வாங்க வேண்டும் என்பது செயப்படுத்துதல் தொடர்பான முடிவு. கொள்கை ரீதியான முடிவுகளை வெற்றியாளர்கள் உடனுக்குடன் எடுக்க மாட்டார்கள். குறித்த காலத்தை நிர்ணயித்துக் கொண்டு அந்தக் காலகட்டத்திற்குள், முடிவுகளுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அதன் அடிப்படையில் அவர்கள் முடிவை மேற்கொள்வார்கள். ஆனால், செயல்படுத்துதல் தொடர்பான முடிவுகளில், உடனுக்குடன் அவர்கள் முடிவு செய்து விடுவார்கள். அது மட்டுமல்ல… தனக்கு கீழ் பணியாற்றுபவர்கள் அந்த முடிவுகளை எதன் […]
ஒரு பெரிய தொழிற்சாலை அங்கு ஆயிரம் பேருக்கு மேல் வேலை பார்த்து வந்தனர். ஒரு நாள், அதன் முதலாளி தொழிற்சாலைக்குள் வலம் வந்தார். அப்போது ஒருவன் மட்டும் வேலை செய்யாமல் ஓரமாக படுத்து காலாட்டிக் கொண்டிருந்தான். முதலாளிக்கு வந்ததே கோபம்… ‘இப்படி ஒருவனை வேலைக்கு வைத்திருந்தால் பிற தொழிலாளிகளும் கெட்டுப்போய் விடுவர் என்று நினைத்தார். அவனை அழைத்து, “தம்பி! நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார். அவன் ஒன்றும் புரியாமல் முழித்துவிட்டு “எட்டாயிரம் ரூபாய் சார்”என்றான். உடனே, பிற தொழிலாளிகளுக்கு முன்பு தன் பாக்கெட்டிலிருந்து பதினாயிரம் ரூபாயை எடுத்து, “இதில் உன்னோட இரண்டு மாத சம்பளம் இருக்கிறது. சும்மா படுத்துக்கொண்டு இருப்பவனுக்கு சம்பளம் […]
மாபெரும் எழுத்தாளர் சாக்ரட்டீஸிடம் ஒரு இளைஞன் வெற்றியின் ரகசியத்தைக் கேட்டான். சாக்ரட்டீஸும் அவனை மறுநாள் காலையில் அந்த ஊரில் உள்ள பிரபலமான ஆற்றங்கரைக்கு வரச் சொன்னார்.
வானில் பறக்கும் ஏரோபிளேனைக் கண்டுபிடிப்பதற்காக 1900ஆவது ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க விஞ்ஞானி சாமுவேல் லாங்லி (Samuel Langley) மாபெரும் திட்டத்தை வடிவமைத்தார்.
ஒருவர் இந்தியாவில் இருந்து கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று காலியான இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
நம்முடைய இலக்கைப் பற்றி திரும்பத் திரும்ப பேசி சுற்றத்தாரையும் நம்ப வைக்க வேண்டும். அது அவர்கள் மூலமாக பிறருக்கும் பரவி, நம் இலக்கு சார்ந்த ஆர்வமுள்ள மனிதர்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். உதாரணத்திற்கு உங்களுக்குத் தெரிந்த ஒரு மாணவர், ‘நான் ஐ.ஐ.டி.யில் சேர விரும்புகிறேன்‘ என்று உங்களிடம் சொன்னால், நீங்கள் உடனே ஒரு ஐ.ஐ.டி. பேராசிரியரையோ அல்லது ஐ.ஐ.டி. மாணவரையோ அல்லது பயிற்சி மையத்தையோ பரிந்துரைத்து, அவருக்கு உதவுவீர்கள். அதன் மூலம் அம்மாணவர் தன் இலக்கை அடைவதற்கான அடுத்த நிலைக்குச் செல்வார். தொழில் தொடங்க ஒருவருக்கு 10 வட்சம் ரூபாய் முதலீடாகத் தேவைப்பட்டது. அவர் ஒரு வங்கியை நாடி கடனுக்காக விண்ணப்பித்திருந்தார். ‘இதோ, அதோ‘ […]
இலக்கை அடைவதற்கான வரைபடத்தை நம் மனதிற்குள் திட்டமிட்டுக் கொண்டால் வெற்றி விரைவாகக் கைகூடும். எப்படி வீடு கட்டுவதற்கு முன் ஒரு ஆர்க்கிடெக்ட் வரைபடத்தைத் தயாரிக்கிறாரோ, அதுபோல் மனதிற்குள் நமக்கு எந்த மாதிரியான வெற்றி தேவை என்கிற வரைபடமும் இருக்க வேண்டும். பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ட்ஸ்நெகர் (Amold schwarzenegger) ஆரம்ப காலத்தில் திரையுலக நட்சத்திரமாக அறியப்படவில்லை. அவர் உலகின் நம்பர் ஒன் பாடி பில்டராகத்தான் (ஆணழகன்) அறியப்பட்டார். 1976 ஆம் ஆண்டு, அவரைச் சந்தித்த ஒரு பத்திரிகையாளர். அவருடைய அடுத்த இலக்கு குறித்து கேட்டபோது, ‘நான் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகராகப் போகிறேன்” என்றார் அர்னால்ட் நடிப்பு சார்ந்த எந்த முன் அனுபவமும் இல்லாத ஆஸ்திரிய […]
வெற்றியாளர்கள் இலக்கை, பணி / தொழில் சார்ந்த இலக்கு, பொது வாழ்க்கை சார்ந்த இலக்கு, தனி மனித இலக்கு என மூன்று களங்களாகப் பிரித்துக் கொள்கின்றனர்.
நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க விரும்புகிறீர்கள்? என்பதற்கு முன்னதாக எங்கு நோக்கி பயணிக்க விரும்புகிறீர்கள் என்ற தெளிவு தேவை.
காலையில் எழுந்தோம்; குளித்தோம்; உணவருந்தினோம்; அலுவலகம் சென்றோம்; வீடு திரும்பினோம், டி.வி. பார்த்தோம்; தூங்கினோம்.
ஒரு ஊரில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. மக்களெல்லாம் பொங்கி எழுந்து இறைவனிடம் சென்று முறையிட்டனர்.
உலகை உருவாக்கிய இறைவன் மனிதர்களுக்கு தண்ணீர், காற்று, வெப்பம், காய், பழம் என அனைத்து வசதிக ளையும் உருவாக்கிக் கொடுத்தான்.
வெற்றியாளர்கள் பின்பற்றும் முக்கியமான தாரக மந்திரம் என்ன தெரியுமா? INTERNAL POSITIVE COMMUNICATION! அப்படி என்றால் என்ன?
ஒருவன், வாழ்க்கையில் தனக்கு மட்டும் வெற்றி கிடைப்பதில்லையே என்று புலம்பிக் கொண்டே இருந்தான். அவன் புலம்பலைக் கேட்ட ஒரு பெரியவர்,
ஒரு மன்னனுக்கு தன் நாட்டில் பால் கிணறு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அந்தப் பால் கிணற்றை உருவாக்கினால்,
உங்கள் காருக்கு நீங்கள் டிரைவராக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது முதலாளியாக இருக்க விரும்புகிறீர்களா?
லேத் (Lathe) தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்த ஒரு தொழில் முனைவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். பணம் புரட்டுவதில் சிக்கல்…
‘ஆயிரம் கண்ணாடி வீடு’ என்ற ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. நீண்ட காலத்துக்கு முன்னால் ஒரு கிராமத்தில் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட
செலவைக் கட்டுப்படுத்துதல் குறித்து யோசிக்கும் போது, விளம்பரச் செலவுகள் அவசியம் தானா அல்லது அவற்றையும் குறைக்க வேண்டுமா..? என்ற கேள்வி பலருக்கு எழலாம்.
ஆர்தர் கார்டன் (Arthur Garden) என்பவர் ஒரு புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். அவர் ஒருமுறை டாக்டர் பிளாட்டன் (Dr. Blaton) என்ற முதிர்ந்த
வால்மார்ட் (Wal Mart) என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடிகளில் ஒன்றாகும். இந்நிறுவனத்தை 1962ஆம் ஆண்டு திரு. சாம் வால்டன் (Mr. Sam Walton)
ஒரு பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ஜென் மதத் துறவி ஒருவர் வந்திருந்தார். அந்த விழாவில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் பல போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் பரிசுக்கு உரியவரைத் தேர்வு செய்யும் நேரம் வந்தது. அப்போது அந்த ஜென் துறவி ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொண்ட அனைவரையுமே வெற்றியாளர்களாக அறிவித்தார். இதைக் கேட்டவுடன் ‘தான் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெறுவோம்’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு மாணவன் பெருத்த ஏமாற்றம் அடைந்தான். அத்துறவியைப் பார்த்து கேட்டான். ‘ஐயா… யாரும் தோல்வி அடைந்து சோர்ந்து விடக்கூடாது என்று தாங்கள் எண்ணுவது […]
செலவுகளைக் கட்டுப்படுத்த வெளியாட்களிடம் ஆலோசனை கேட்பதை விட, அத்தொழிலில் இருக்கும் சீனியர்களின்,
ஒரு சிறுவன், தன் தாய் மீன் வறுப்பதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் மீனின் தலைப் பகுதியை வெட்டிய தாய்,
விவசாய நிலத்தின் நடுவில் ஒரு பாறை இருந்தது. நிலத்தை உழுவதற்கு அந்தப் பாறை மிகவும் இடையூறாக இருந்தது.
ஒரு பணக்கார அமெரிக்கர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார். இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதால் தமது விலையுயர்ந்த
வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளைப் (Credit Card) பொறுத்தவரை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும்.
வங்கியின் சேவைகளும், சேவைக் கட்டணங்களும் ஒரு காலத்தில் மிகமிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், இப்போதெல்லாம் எண்ணற்ற அயல்நாட்டு
உலகின் மிகப்பெரிய 29,000 அடி செங்குத்தான உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மீது, 1953 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் முதலில் காலடி எடுத்து வைத்தார் சர். எட்மண்ட் ஹிலாரி.
வித்தியாசமான உத்திகளால் விளம்பரச் செலவைக் குறைக்கலாம்! விளம்பரம் என்பது என்ன? நான் இந்தப் பொருளை விற்கிறேன்;
இன்றைக்கு பொருட்களை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகபட்ச கவனமும் மார்க்கெட்டிங் துறை மேல்தான். குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் பொருட்களை விற்பது எப்படி?
ஒருமுறை மிகச் சிறிய கழுகுக் குஞ்சு ஒன்று கோழியின் கூட்டில் வந்து விழுந்தது. கோழிக் குஞ்சுகளோடு சேர்ந்து கழுகும் வளரத் தொடங்கியது.
செலவுகளும் சில சமயம் முதலீடாவது உண்டு. அவை எப்படியான செலவுகள்…? வருமானம் தராத – ஆனால், வருமானம் ஈட்டுவதற்கு அவசியம் தேவைப்படக்கூடிய செலவுகள் முதலீடு என்று கருதப்படுகிறது.
எந்தச் செலவுக்கு நாம் முன்னுரிமை தரவேண்டும் என்பதைப் பட்டியலிட்டு பின்பு முன்னுரிமையின் அடிப்படையில் செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.
தவணை முறையில் பொருட்களை வாங்கலாமா? என்பது நடுத்தரக் குடும்பம் தொடங்கி, சிறு நிறுவனங்கள் வரை பலருக்கும் எழும் குழப்பம்.
ஒரு நாள் அரசர் கிருஷ்ண தேவராயர் விலை உயர்ந்த அரேபியக் குதிரையில் வெளியே புறப்பட்டார். தெனாலிராமன் தானும் வருவதாக கூறினான்.
சிக்கனம் பற்றிப் பேசும்போது, பராமரிப்பும் மிக முக்கியமான ஒரு விஷயம். எலக்ட்ரானிக் பொருட்களையும் ஆட்டோமொபைல் பொருட்களையும் தொடர்ந்து முறையாகப் பராமரித்தால் அவை நீண்ட நாட்களுக்கு உழைக்கக்கூடும்.
மின்சாரக் கட்டணங்கள் இப்போது ஷாக் அடிக்கும் செலவு விஷயமாக மாறி வருகின்றன. ஒரு நிறுவனத்தின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
பொது நூலகங்களில் ஒன்றான ‘அலெக்சாண்ட்ரியா’ (Alexanderia) எரிந்து சாம்பலான பிறகு ஒரு சில புத்தகங்கள் மட்டுமே தீயின் நாக்குகளில் இருந்து தப்பித்தன.
அந்தக் காலத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு காலங்காலமாக ஒரு சிக்கல் இருந்து வந்தது. அப்போதெல்லாம் ஐஸ்கிரீமை கண்ணாடிக் கோப்பைகளில் வைத்து கடைகளில் விற்பனை செய்வது தான் வழக்கம். கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களிலும்,
கடனுக்கு வாங்கினால் கூடுதல் விலையிலும், ரொக்கத்துக்கு கொள்முதல் செய்தால் குறைவான விலையிலும் பொருட்கள் கிடைக்கும் என்பது நீங்கள் அறிந்ததே!
பொதுவாக எந்த நிறுவனத்திற்கும் அல்லது எந்தத் தொழில் முனிவருக்கும் நோக்கம் அல்லது இலக்கு (Vision or Target) மிகவும் முக்கியம். நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதில்
உங்கள் தொழிலின் லாபம் அதிகரிக்க வேண்டுமா…? அதைச் செய்ய வழி தெரியாமல் தான் இங்கே இருக்கிற அத்தனை பேரும் பாடாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்க
‘பிராண்டிங்’ என்பது பொருளுக்கு மட்டுமல்ல தொழில் முனைவருக்கும் அவசியம். அம்பானி என்றாலே அவரை நம்பி முதலீடு செய்யலாம் என்கிற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்து விட்டது.
பொதுவாக எந்த ஒரு வியாபாரமுமே ஆரம்பிப்பது, கொள் முதலில் இருந்துதான். பொருளைக் கொள்முதல் செய்கிறபோது அந்தப் பொருளுக்குக் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 5
வேலை பிஸியில் இருந்த நேரம். என் அலுவலகத்துக்கு வந்தார் உற்சாகமான ஒரு நண்பர். நண்பரின் மொபைல் ஒலித்தது. லைனில் இருக்கிறாரா,
ஒரு விவசாயியின் நிலத்தில் இருந்த பயன்படாத பழைய கிணற்றில் ஒரு கழுதை விழுந்து விட்டது. கிணறு மிக ஆழமாக இருந்ததால் கழுதையால் மேலே ஏறி வர இயலவில்லை.
பணம் இல்லாமலும் செய்ய சில தொழில்கள் உள்ளன. இது சாத்தியம்தானா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். நாம் தொழில் என்று நினைத்தவுடனேயே ஒரு பெரிய கடை
ஒரு தொழிலைத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குள் நிறுவனம் சரிவைச் சந்தித்தால் என்ன வகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?
தொழில் நடத்துவோரில் 90 விழுக்காட்டினர் கடன் வாங்கியே தொழிலில் முதலீடு செய்கின்றனர். எனவே இன்றைய போட்டி மிகுந்த சூழலில் கடனே வாங்காமல்
இங்கிலாந்திலிருந்து வெள்ளையர்கள் இந்தியாவில் குடியேறியபோது, இந்திய மக்களுக்கு பற்பசை கொண்டு பல் துலக்கும் பழக்கம் அவ்வளவாக நடைமுறையில் இல்லை.
ஒரு தொழில்முனைவர், தொழில் தொடங்குகின்ற போது தனக்கு கீழ் வேலை செய்ய அதிகாரிகள், பணியாளர்கள் போன்றோரை நியமிப்பது பற்றி தொடக்கத்தில் சிந்திப்பதில்லை
நீண்ட நாட்களுக்குப் பிறகு அண்மையில் ஒரு நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் பல ஆண்டுகளாக ஒரு ‘பேக்கிங் யூனிட்’ நடத்த ஆவல் கொண்டிருந்தது தெரியும்.
நீங்கள் தொழில் புரியும் இடத்தில் ஒரு தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்றில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களை நடத்தலாம்.
கஜினி படம் பார்த்தீர்கள் தானே…! ‘ஹாய்… ஐயாம் சஞ்சய் ராமசாமி!’ என்று ஒரு டூப்ளிகேட் அறிமுகம் செய்து கொள்வார். எதிரில் இருப்பவர் தான் சஞ்சய் ராமசாமி என்பதை அறியாமலேயே!
இந்தக் கேள்வியை சற்று மாற்றி யோசித்துப் பாருங்கள். உறுதியாக லாபமே தராத தொழில் என்று ஏதேனும் இருக்கிறதா… என்ன?
தொழிலாளி, முதலாளி ஆக முடியுமா..? இக்கேள்வி பலருக்கும் எழும் முக்கியமான ஒன்று. வேலை பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோருக்குமே சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை மனதின் ஒரு மூலையில் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும். வேலையை உதறிவிட்டுத் தொழில் தொடங்கலாமா… அல்லது வேலையில் இருந்து கொண்டே தொழில் தொடங்கலாமா? இது அடுத்த கேள்வி. இந்தக் கேள்விகளுக்கு என்ன விடை? உங்களில் எத்தனை பேர் கிங்க் வால் குரங்கு, மரம் விட்டு மரம் தாவுவதைத் கூர்ந்து பார்த்திருக்கிறீர்கள்? அது எடுத்தவுடன் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்குத் தாவி விடாது. முதலில் தன் வாலை அடுத்த மரத்துக் கிளையில் சுற்றிக்கொண்டு, தாம் விழ மாட்டோம் என்று உறுதியாகத் தெரிந்த பிறகே […]
ஒர் அரசன் தம் நாட்டில் புதிய நெடுஞ்சாலை ஒன்றை அமைத்தான். அந்த நெடுஞ்சாலையை பொதுமக்களுக்கு திறந்து விடுவதற்கு முன்பாக
பொதுவாக எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கும் எந்த ஒரு நிகழ்வுமே அதிர்ச்சி தரும். அதிர்ச்சி ஏற்பட்டால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளில்
தொழில் தொடங்குகின்றபோது பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழுவது இயற்கையே.
மனைவியைப் பங்குதாரராகச் சேர்த்துக் கொண்டு தொழில் தொடங்கலாமா? சகோதரர்கள் அல்லது உற்றார் உறவினர்களைப்
‘ படகை எரித்து விடுங்கள் ‘ ( Burn the Boat ) என்று ஒரு ஆங்கிலக் கதை உண்டு . ஒரு தளபதி தன் போர் வீரர்களை அழைத்துக் கொண்டு பல படகுகளில் மிகப் பெரிய கடலைக் கடந்து அழகிய தீவு ஒன்றுக்கு பயணமானான் . அந்தத் தீவை அடைந்தவுடன் அவன் தனது படை வீரர்களை அழைத்து படகுகளை எரித்துவிட உத்தரவிட்டான்.
தொழில் தொடங்குவதற்கென்று வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்த வயதினர் தொழில் தொடங்கினால் வலுவான உடல்
தெரியாத தொழிலில் ஈடுபடலாமா…? இது பலருக்கும் எழும் கேள்வி! பிறர் செய்து வரும் தொழில்களைப் பற்றிக் கவலைப்படாமல்
தொழில் தொடங்க விரும்பும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டியது பலூன் தத்துவம். தொழிலின் அடிப்படை நெளிவு சுளிவுகளைப் பலூனிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
தொழில் தொடங்க எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் எத்தனை பேரால் முடிகிறது?
களிமண், பஞ்சு, சர்க்கரை என மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு. பிரச்சனை என்கிற தண்ணீர் பட்டவுடன் இறுகிப் போகிறவர்கள் ‘களிமண் மனிதர்கள்‘
Networking என்ற சொல்லைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோரும் இந்த Networking கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்.
ஒரு ஊரில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. மக்களெல்லாம் பொங்கி எழுந்து இறைவனிடம் சென்று முறையிட்டனர்.
காலையில் எழுந்தோம்; குளித்தோம்;உணவருந்தினோம்; அலுவலகம் சென்றோம்; வீடு திரும்பினோம்; டி.வி. பார்த்தோம்; தூங்கினோம் என ஒரே மாதிரியான
நீங்கள் அணிந்திருக்கும் சட்டையின் விலை ரூ.300. பேண்டின் விலை ரூ.500. ஷுவின் விலை ரூ.700. வைத்திருக்கும் செல்போனின் விலை ரூ.5000. உங்கள் விலை என்ன?
நீங்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டுமா? எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?
வெற்றியாளர்கள் பணத்தைவிட, நேரத்தை மிச்சப்படுத்துவதிலேயே அதிக கவனத்தோடு இருக்கிறார்கள். ஏன் தெரியுமா? ஒரு கல்லூரியில் பேராசிரியர் மாணவர்களிடம் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.
வெற்றியாளர்கள் சரியான முடிவு எடுப்பவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், உடனடியாக முடிவு எடுப்பவர்கள் என்று உறுதியாகக் கூறலாம். இதற்கு ஒரு உதாரணம்.
உங்கள் இலக்கு எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த உயரத்தை எண்ணி மலைத்துவிட வேண்டியதில்லை. அவற்றை சிறிய இலக்குகளாக வகுத்துக் கொண்டால் அடைவது எளிது.
நீங்கள் வெற்றியாளராவதற்கான ஒரு முக்கியமான ரகசியத்தை பார்க்கப் போகிறோம். ‘உங்கள் டேபிளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்‘ என்பதுதான் அது. நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்கலாம்… “இது எப்படி என்னை வெற்றியாளனாக்கும்?” என்று.
தெனாலி படம் பார்த்திருப்பீர்கள். எதைப் பார்த்தாலும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார் கமல். நம்மில் பலரும் அப்படித்தான். குறிப்பாக,
கையில் பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களோடு 12 ஆம் வகுப்பு படித்த 10 மாணவர்களின் பெயர்களை வரிசையாக எழுதுங்கள்.
பரந்தாமனுக்கு ஒரு பெரிய பிசினஸ் ஆர்டர் கிடைத்தது. 20 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அந்த ஆர்டரை எடுத்து 2 லட்சம் வரை லாபம் பார்க்கலாம்.
ஆயிரக்கணக்கான பணக்காரர்களைச் சந்தித்து, அவர்கள் வெற்றி பெற்றதற்கான காரணங்களை ஆராய்ந்த போது, நாள் முழுவதும் பாசிட்டிவாக இருந்தது கண்டறியப்பட்டது.
பொதுவாக நாம் தோல்வியைச் சந்திக்கிறபோது என்ன சொல்வோம் தெரியுமா? “நேரம் சரியில்லை“
சென்னையில் இருந்து மதுரைக்குக் கிளம்பிய ஒருவன், எதிரில் ஒரு பெரியவரைச் சந்தித்து வழி கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே
வருமானத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒரு வழி தொழிலை 2 ஷிப்ட்களாகவோ அல்லது 3 ஷிப்ட்களாகவோ மாற்றுதலாகும்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீங்கள் வெற்றியாளராக வேண்டுமென்றால், உங்கள் பையில் எப்போதும் பேப்பர், பேனாவை வைத்துக் கொண்டு உங்களுக்கு