fbpx
அறிவா… வலிமையா..? | Knowledge…or power..?

Knowledge or power
  • September 30, 2024

ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த நாட்டின் மன்னன், பேச்சுவாக்கில் வாய் தவறி, ‘உங்கள் அறிவுக் கூர்மையை விட, எனது உடல் வலிமையே பெரியது!என்றான். நீங்கள் அறிவாளி என்பதைப் பேசிப் புரியவைக்க வேண்டும். 

ஆனால், நான் பலசாலி என்பது முதல் பார்வையிலேயே புரிந்து போகும்! என்று வாதிட்டான்.

ஞானியும் மோதலுக்குத் தயாரானார். என் அறிவு வலிமை என்றில்லை. யாருடைய அறிவு வலிமையும் எந்த உடல் வலிமையையும் விடப் பெரியது என்பது என் கருத்து மன்னா! என்றார் ஞானி.

மன்னன் அதை ஏற்கவில்லை. போட்டிக்கு ஏற்பாடானது. அரண்மனை மதில்சுவருக்கு அருகே மன்னனும், ஞானியும் நின்று கொண்டிருந்தனர்.

மன்னா! நான் சொல்லும் பொருளை நீங்கள் சுவருக்கு அந்தப் பக்கம் போய் விழும்படி வீச வேண்டும். அப்படிவீசிவிட்டால் உன் உடல் வலிமையை நான் ஒப்புக் கொள்கிறேன். உன்னால், முடியாவிட்டால் நான் வென்றதாகஒப்புக் கொள்வாயா…? என்று கேட்டார்.மிகப் பெரிய பாறையைக் கொடுத்து, அதைத் தூக்கவேமுடியாமல் போனால், போட்டியில் தேவையின்றி தோற்ற அவமானம் ஏற்படுமே என்று எண்ணிய மன்னன், ‘என்னால் முடியாததைநீங்கள் செய்தால் மட்டுமே நான் உங்கள் அறிவாற்றலே பெரிது என்று ஒப்புக் கொள்வேன்..!” என்று சமயோசிதமாகச் சொன்னான் மன்னன்.”

ஞானி சிரித்துக்கொண்டே, தன் இடையில் கட்டியிருந்த மெல்லிய பட்டு ரிப்

 

பனை அவிழ்த்துக் கொடுத்தார். ம்.. வீசு என்றார். மன்னருக்கு இன்ப அதிர்ச்சி அலட்சியமாக அதை வாங்கி, பலம் கொண்ட மட்டும் உயரத் தூக்கி வீசினான் மன்னன். காற்றில் மிதந்த பட்டுத் துணி, அங்குமிங்கும் பறந்து, அரசனின் காலடியில் வந்து விழுந்தது. மன்னன் தோல்வியை ஒப்புக் கொள்ளும் நோக்குடன், பட்டுத்துணியை ஞானியிடம் கொடுத்தான்.

அனைவரும் ஞானி என்ன செய்யப்போகிறார் என்று ஆர்வத்தோடு காத்திருந்தனர். பட்டுத்துணியை எடுத்த ஞானி, அதற்குள் கையளவு கருங்கல்லை வைத்துக் கட்டினார். சுவற்றுக்கு அந்தப் பக்கம் அதனை வீசி எறிய மன்னன் ஞானியிடம் சரணாகதி அடைந்தான்.

மாங்கு மாங்கென்று உழைத்துக் கொண்டே இருப்பதைவிட, சரியான பந்தை சரியான திசைக்கு அனுப்பி இலக்கை எட்டுவதே புத்திசாலித்தனம். நாம் ஒரு முதலாளியாக, மேலதிகாரியாக இருந்தால், நம்மிடம் இருக்கவேண்டிய புத்திசாலித்தனமான இரண்டு அம்சங்கள் ஒன்று நேர்மை. இன்னொன்று சாமர்த்தியம். இதுதான், கீழே இருக்கிற டீமை அப்படியே கட்டிப் போடும்.

சரி, நேர்மை என்பது என்ன..? கொடுத்த வாக்குறுதியை இம்மி அளவும் பிசகாமல் காப்பாற்றுவதுதான் நேர்மை.

சாமர்த்தியம்.? அப்படியான வாக்குறுதி எதையுமே கொடுக்காமல் இருப்பதுதான் சாமர்த்தியம்.

நம் புத்திசாலித்தனம் மூலம் நம்முடன் இருப்போரைத் தக்க வைப்போம். அதற்கு பெரிய உடல்பலம் இருக்க வேண்டியது இல்லை. உள்ளத்தின் பலம் இருந்தாலேபோதும்.

 

Comments are closed.