fbpx
உங்களுக்குள் என்ன இருக்கிறது ? | What is inside you?

What is inside you?
  • August 4, 2026

நீங்கள் ஒரு கையில் காபி கப்பை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள். அப்போது ஒருவர் உங்களை உரசிக்கொண்டு வேகமாகச் செல்கிறார். காபி உங்கள் மீது சிந்தி விடுகிறது.

இப்போது, “ஏன் காபி உங்கள் மீது சிந்தியது ?” என்று யாராவது கேட்டால், “யாரோ ஒருவர் உரசிச் சென்று விட்டார். அதனால் சிந்தியது” என்று நீங்கள் சொல்வீர்கள்… சரிதானே ?

ஆனால், அது சரியான பதில் அல்ல… கப்பில் காபி இருந்ததால், அது சிந்தியது. ஒருவேளை, கப்பில் டீ இருந்திருந்த்தால் டீ சிந்தியிருக்கும்…. அல்லது பால் இருந்திருந்தால் பால் சிந்தி இருக்கும். அதாவது, உள்ளே எது இருக்கிறதோ அதுவே சிந்தும்.

ஆம் ! வாழ்க்கை பிரச்சினைகளைக் கொண்டு நம்மை உலுக்கிப் பார்க்கிற போது, நமக்குள் என்ன இருக்கிறதோ, அதுவே வெளியில் சிந்துகிறது.

நமக்குள் கோபம் இருந்தால், கோபமே வெளியில் வரும். உற்சாகமிருந்தால அதுவே வெளிப்பட்டு, பிரச்சனையைக் கையாள உத்வேகம் கொடுக்கும். நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையே வெளியே வரும்.

வாழ்க்கை நம் எல்லோருக்கும், ஒரு கப்பைக் கொடுத்திருக்கிறது. அந்தக் கப்பிற்குள் எதை நாம் நிரப்புகிறோம் என்பதில் இருக்கிறது, நம் வெற்றி !

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai

Comments are closed.