fbpx
ரிப்பீட்டு…! | POWER OF REPETITION

POWER OF REPETITION
  • July 27, 2025

வெற்றி பெற்ற மனிதர்கள் பின்பற்றுகிற ஒரு முக்கியமான உத்தி என்ன தெரியுமா ? ‘பவர் ஆஃப் ரெப்படீஷன்’ (POWER OF REPETITION)….

ஆம்! திரும்பத் திரும்பத் திரும்ப ஒரே வேலையை – நாள்தோறும் சிறிது, சிறிது முன்னேற்றத்துடன் – புதிய, புதிய உத்திகளுடன் செய்து கொண்டே இருத்தல்.

விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், விஸ்வநாத் ஆனந்த், பி.டி. உஷா, மேரி கோம், சாய்னா நேவால்… இப்படி களத்தில் வெற்றி பெற்றுச் சாதித்த எல்லோருக்குப் பின்னாலும் இருப்பது, இந்த உத்தி தான்.

அவர்கள் நாள்தோறும் திரும்பத் திரும்பத் திரும்ப பிராக்டிஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள்… அலுக்காமல், சளைக்காமல், சோர்ந்து விடாமல், மீண்டும், மீண்டும் களமாடிக்கொண்டே இருக்கிறார்கள்…

ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து கொண்டே இருக்கிறார்கள்… அதுதான் அவர்களை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

சரி… சாதனையாளர்களை விடுங்கள் ! நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு வருவோம்.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சில நல்ல விஷயங்களைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம். அதிகாலையில் எழுந்திருத்தல், உடற்பயிற்சி செய்து நம்மை ஆரோக்கியமாக வைத்திருத்தல், நேரந் தவறாமையைக் கடைபிடித்தல்… இதுபோன்ற சில சுய கட்டுப்பாடுகள் வெற்றிக்கு மிக அவசியம்.

இவற்றையெல்லாம் நாம் கைக்கொள்ள வேண்டும் என்றால் முதலில் இந்தப் பழக்கங்களைத் தொடங்க வேண்டும். பிறகு இதை திரும்பத் திரும்பத் தொடர வேண்டும். எவ்வளவு முறை தெரியுமா ? 66 முறை…..! எந்த ஒரு வேலையையும் 66 முறை திரும்பத் திரும்பச் செய்துவிட்டால் அது நமது பழக்கம் ஆகிவிடும். நம்மையும் அறியாமல் அது நம்மைப் பின்தொடர்ந்து வரும்.

ஆம் ! அறிஞர் அரிஸ்டாட்டில் கூட இதையே தான் சொல்கிறார்…. “நாம் எதைத் திரும்பத் திரும்பச் செய்கிறோமோ அதுவே ‘நாம்’ ஆகிறோம். நிபுணத்துவம் என்பது ஒரு கலை அல்ல… அது ஒரு பழக்கம்” என்று. (WE ARE WHAT WE REPEATEDLY DO…. EXCELLENCE, THEN, NOT AN ART, BUT IT IS A HABIT).

எனவே ‘பவர் ஆப் ரெப்படீஷனை’ முயற்சித்துப் பாருங்கள். உங்கள் சக்சஸ் மீட்டரும் வேகமாக ஓடக்கூடும்.

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu

Comments are closed.