fbpx
எதுவும் சாத்தியமே! | Anything is possible!

anything is possible
  • September 22, 2024

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.மொட்டை புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா.என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஆனாலும்ஆளுக்கொரு திட்டத்துடன் கிளம்பிச் சென்று திரும்பி வந்தனர்.முதலாவது மகன் இரண்டு சீப்புகளை விற்றிருந்தான். “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.” இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் சீப்புகள் வாங்கினார்கள்

இன்னொரு மகன் சொன்னான்:- “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன். வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போகிறவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரைத் தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றும் என்று மடாதிபதிகளிடம் சொன்னேன். ஒப்புக்கொண்ட அவர்கள் பத்து சீப்புகள் வாங்கினார்கள்.”வியாபாரி அந்த மகனைப் பாராட்டி விட்டுமூன்றாவது மகனிடம் வந்தார். மூன்றாம் மகன் சொன்னான்:- “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்.” வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படிஅந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களைவழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப்பரிசுவழங்கினால்அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும்” என்றேன். அந்த மடாலயத்தலைவர்என்னநினைவுப்பரிசு தரலாம்.என்று கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழி நடத்தும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்கினார்.” என்றார்.அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.ஒரு பொருளை விற்கமுடியாது என்று ஆரம்பத்தில் துவண்டு போவதைவிடஅதை மதிப்புக் கூட்டி எப்படி விற்பது என்பதே நமது சிந்தனையாக இருக்க வேண்டும். புதுமையானவித்தியாசமானபுத்திசாலித்தனமான செயல்பாடுகள் எப்போதுமே பிறரால் வாரி அணைத்துக் கொள்ளப்படும்.பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள். சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும்நம்பிக்கையுடனும்துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப்போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.எப்போதுமே நமது எண்ண ஓட்டத்தை பாஸிட்டிவாக வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடியும்என்று நினைக்கும் எந்தக் காரியமும் எப்போதுமே தோல்வியில் முடிந்ததில்லை.

கதையில் வந்த உதாரணத்தில்முதல் இரண்டு மகன்களுடைய முயற்சியும் பாராட்டத்தக்கதே. ஆனால்அவர்களால் புத்த மடாலயத்திற்கு தொடர்ந்து சீப்பு சப்ளை செய்ய முடியாது. ஆனால்மூன்றாம் மகனின் விற்பனை வழிபக்தர்கள் பெருகப் பெருக வளர்ந்து கொண்டே போகும் என்பதில் சந்தேகமில்லை. வித்தியாசமான யோசனையிலும் சிறப்பான ஒன்றைக் கைக்கொள்ளுங்கள்

Comments are closed.