காட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தஇளைஞனுக்குப்பசியெடுத்தது. எதிர்ப்பட்ட மரத்தில்உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.
மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில்இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்றபோதுஅவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.
சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப்பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டுயாராவது காப்பாற்றுங்கள்” என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்துவிட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக்கொண்டுதொடர் அலறல் விடுத்த இளைஞனைப் பார்த்தார். கீழே கிடந்த கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரேஉதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே… அறிவில்லையா உமக்கு..என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் கால்களை உந்திஅந்தக் கிளையைப் பற்றியதோடுபுரண்டு படுத்தான். “கிழவா… நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான். மூச்சு வாங்க ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
பெரியவர் விடுவதாக இல்லை. இன்னொரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளையைப் பற்றியபடி விடுவிடுவென இறங்கி வந்தான். அவரைசரமாரியாகத் திட்டினான். “எதுக்கய்யா கல்லால் அடித்தீர்.உயிருக்குப் போராடுபவனைப் பார்த்தால் உமக்கு இளப்பமாக இருந்ததோ.என்றான் கோபம் கொப்பளிக்க!
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டேதம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.
நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து என்மேல் கோபப்பட ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன்கீழேவந்து என்னைப் பிடிப்பதில் உன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை “நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.
ஆத்திரமும் பயமும் புத்தியைச் செயலிழக்க வைக்கும் என்பது புரிகிறதா… தவறை நம்மேல் வைத்துக்கொண்டுதலையெழுத்தைக் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும்..
வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லோருமே தங்கள் குரலால் செயலால் குணாதிசயத்தால் மாமனிதர்களாகத் திகழ்கிறார்கள்.அதாவதுஒருமனிதனுடைய எண்ணம்தான் வார்த்தையாக மாறுகிறது..வார்த்தைதான் செயலாக மாறுகிறது.தொடரும் செயல்கள்தான் பழக்கவழக்கமாகமாறுகிறது….பழக்கவழக்கம் தான் குணாதிசயமாக கருதப்படுகிறது. குணாதிசயம் என்னும் கேரக்டர்தான் தலையெழுத்தாகிறது.
உங்கள் தலையெழுத்து எப்படி உருவாகிறது என்று இப்போது புரிகிறதா..
எண்ணத்தை சீர்படுத்துங்கள்… எல்லாமே மாறிப் போகும்!