நீங்கள் ஒரு நிகழ்வை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதில் அடங்கியிருக்கிறது, உங்கள் வெற்றியின் ரகசியம்.
ஆப்பிள் நிறுவனத்தின் தொடங்குனர்களில் ஒருவராகிய ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு கட்டத்தில் அந்நிறுவனத்திலிருந்தே, மற்ற பங்குதாரர்களால் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவர் அதைப் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு, மீண்டும் வீறு கொண்டு செயல்படத் தொடங்கினார். நெக்ஸ்ட் (NeXT) என்கிற கம்ப்யூட்டர் பிளாட்பார்ம் உருவாக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்நிறுவனம் மிகப் பெரிதாக வளரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆப்பிள் நிறுவனமே அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டது.
மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பொறுப்பேற்றார். பிற்பாடு, அதனை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக உயர்த்திக் காண்பித்தார்.
முதலில் விலக்கப்பட்டபோது அவர் முடங்கிப் போயிருந்தால், ஸ்டீவ் ஜாப்ஸை இன்று உலகம் அறிந்திருக்காது.
ஸ்டீவ் ஜாப்ஸ்-இன் வெற்றிக்கு, எந்த நிகழ்வையும், பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் அவரது குணமே காரணம்.
இது ஒரு புறம் இருக்க, எந்தப் பொருளையும் கூட நாம் பாசிட்டிவாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு சுத்தியல், கண்ணாடியை உடைக்கப் பயன்படும். ஆனால் அதே சுத்தியல், மரத்தையும், இரும்பையும் அழகுற செதுக்கி, ஒரு பொருளை வடிவமைக்கவும் உதவும். ஆக, ஒன்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும் வெற்றிக்கு முக்கியம்.
எந்த நிகழ்வையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வதும், எந்தப் பொருளையும் பாசிட்டிவாகப் பயன்படுத்துவதும் வெற்றியாளர்களின் முக்கிய சூத்திரங்களாகும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai