fbpx
Are you credible? – உங்களிடம் ‘நம்பகத்தன்மை’ இருக்கிறதா?

Are you credible?
  • February 5, 2021

 பரந்தாமனுக்கு ஒரு பெரிய பிசினஸ் ஆர்டர் கிடைத்தது. 20 லட்ச  ரூபாய் முதலீடு செய்தால் அந்த ஆர்டரை  எடுத்து 2 லட்சம் வரை  லாபம்  பார்க்கலாம்.

அவர் பணம் கேட்டு வங்கியை நாடினார். வங்கியில் கடன் வாங்கினால் 14% வட்டி செலுத்தினால் போதும். அவரது வங்கிக் கணக்கு எண்ணையும், பான்  (PAN) நம்பரையும் வாங்கி அவரது கணக்கு பரிவர்த்தனைகளை ஆராய்ந்து பார்த்தார் வங்கி மேலாளர். பரந்தாமன், முன்பு வாங்கிய கடன்களை சரியாகத் திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் அவருக்கு கடன் தர மறுத்து விட்டார்.

வங்கியில் அவருக்கு கடன் மறுக்கப்பட்டதால், தனியார் நிதி நிறுவனத்திற்கு ஓடினார். அங்கு 24% வட்டியில் கடன் தருவார்கள். ஆனால், அங்கும் இவரது நம்பகத்தன்மையின் கேள்விக்குறியால்  இவருக்கு கடன் மறுக்கப்பட்டது.

பிறகு வேறு வழியின்றி, 60% வட்டிக்கு கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அந்த ஆர்டரை முடித்துக் கொடுத்தார். விளைவு, இவருக்கு கிடைக்க வேண்டிய லாபம் முழுவதும் கந்து வட்டிக்காரர்களுக்கே போய் சேர்ந்தது.

நம்மில் பலரும் இப்படித்தான். அதிக வட்டிக்கு கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்து பிறகு லாபம் முழுவதையும் வாடகை, சம்பளம், வட்டி போன்றவற்றிற்கு செலவு செய்து விட்டு வெறும் கையோடு வீடு திரும்புகிறோம்.

இப்போது நாம்  சிந்திக்க வேண்டியதுநாம் நமக்காகச் சம்பாதிக்கிறோமா? அல்லது பிறருக்குச் சம்பாதித்துக் கொடுக்க தொழில் நடத்துகிறோமாஎன்பதுதான்.

நம்பகத்தன்மைஎன்பதன் அர்த்தம் புரியாத காரணத்தினால் தான் இதுபோன்ற சிக்கலில் நாம் மாட்டிக் கொள்கிறோம்.

பணக்காரர்களிடம் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான  உத்தி இந்த நம்பகத்தன்மை‘  (CREDIBILITY)  ஆகும்.

பணக்காரர்கள் பணம் கொடுக்கல்வாங்கலிலும், பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையிலும் நம்பகத்தன்மையைக் கட்டிக் காக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்களது முதல் முதலீடே நம்பகத்தன்மை தான்.

அவர்கள்  தேவையில்லாத விஷயங்களுக்குக் கடன் வாங்குவதில்லை.

தேவையான விஷயங்களுக்கு கடன் வாங்கும் போதும் அதிகபட்ச வட்டி 18 சதவிகிதத்திற்கும் மேல் செல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கடன் வாங்குகிறபோதே பணத்தை எப்படிச் சம்பாதித்து எவ்வளவு நாட்களில் திரும்ப செலுத்த வேண்டும் என்பதை திட்டமிடுகிறார்கள்.

கடனை திரும்ப அடைக்கிற போது வட்டியை மட்டும் செலுத்தாமல், அசலின் ஒரு பகுதியையும் மாதந்தோறும் திருப்பிச் செலுத்திக் கொண்டே வருகிறார்கள்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் பணத்தை திரும்பச் செலுத்த முடியாவிட்டால், தலைமறைவாகி விடாமல், நேரில் ஆஜராகி கஷ்டத்தை எடுத்துச் சொல்லி கூடுதல் டைம் வாங்குகிறார்கள்.

கடன்காரர்களிடம் மட்டும் அல்லாமல் ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுப்பது, சப்ளையர்களுக்கு முறையாக பணம் கொடுப்பது என பணம்  சார்ந்த எல்லா பட்டுவாடாக்களிலும்  ஒழுங்கை கடைபிடிக்கிறார்கள்.

இந்த நம்பகத்தன்மையைத் தக்க வைத்துக்கொள்ள எப்போதுமே கையில் ரொக்கப் பணத்தை வைத்துக் கொள்கிறார்கள்.

சொந்தச் செலவுகளை முடிந்தவரை சுருக்கிக் கொள்கிறார்கள்.

அண்மையில், ஒரு வங்கியின் பொது மேலாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது, முதன்முதலில் சிறு தொழில் ஒன்றுக்கு அவர் ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்ததையும், அத்தொழிலதிபர் பணத்தை ஒழுங்காகத் திருப்பி செலுத்தி, பிறகு மூன்று முறை திரும்பக் கடன்  பெற்று அவற்றையும் செட்டில் செய்து விட்டதால், தற்போது அவருக்கு ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கிய சம்பவத்தைச் சொன்னார். இதற்கு காரணம் நம்பகத்தன்மை‘.

இந்த நம்பகத்தன்மை, பணப்  பரிவர்த்தனைகளில் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருளை விற்பது, விற்றபின் முறையாக சேவை வழங்குவது, குறைபாடு இருந்தால் மாற்றித் தருவது என்பன போன்ற வாடிக்கையாளர் திருப்தி சார்ந்த விஷயங்களில், அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்.

சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது. ஒரு வாடிக்கையாளர் புத்தகக்  கடைக்குச் சென்றார்அவர் கேட்ட புத்தகம், அந்தக் கடையில் இல்லை. அங்கிருந்த பெண்மணி, இன்டர்நெட்டில் தேடிப் பார்த்து, தம் கடைக்கு அருகில் இருந்த போட்டியாளர் கடையில் அந்தப் புத்தகம் இருப்பதைக் கண்டு, உடனே ஒரு  பையனை அனுப்பி வாங்கி வரச் செய்தார். வாங்கிய விலைக்கே அந்தப் புத்தகத்தை வாடிக்கையாளரிடம் கொடுத்தார்.

அந்தப் பெண்மணி அப்படி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை தான். ‘புத்தகம் இல்லைஎன்று சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாமல், ‘மெனக்கெட்டுபுத்தகம் வாங்கிக் கொடுத்ததற்குப் பெயர் தான் வாடிக்கையாளர் சேவை‘.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்தொழிலில் லாபம் ஈட்டுவதை விட நம்பகத்தன்மையை  ஈட்டுவதே  மிக முக்கியம். எப்போது நீங்கள் நம்பகத்தன்மையை  இழக்கிறீர்களோ அப்போதே தொழிலில் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறீர்கள்.

உங்களது நம்பகத்தன்மை என்ன என்பதை தெரிந்து கொள்ள விருப்பமா? உங்களுக்கு கடன் தர எவ்வளவு பேர் முன் வருவார்கள் என்று பட்டியலிடுங்கள்அதுவே உங்கள் நம்பகத்தன்மையின் அளவாகும்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் இதுவரை பெற்றுள்ள கடன்களைப் பட்டியலிட்டு அவற்றுக்கு செலுத்தும் வட்டியையும் கணக்கிடுங்கள். இந்த வட்டியை விடக் குறைந்த வட்டியில் கடன் பெற முடியுமா? வாங்கிய கடனுக்கு வட்டி மட்டும் செலுத்தாமல் மாதந்தோறும் அசலின் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த முடியுமா? என்று யோசியுங்கள்.

 

·        இராம்குமார்சிங்காரம, Motivational Speaker in Tamil

 

Comments are closed.