இ.எம்.ஐ. விதி – 40%
எல்லாவற்றையும் கடனில் வாங்கி, இ.எம்.ஐ. (Equated Monthly Instalments – மாதாந்திர தவணைத் தொகை) செலுத்துகிற பழக்கம், தற்போது இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது.
ஒருவர் தன்னுடைய மாத வருமானத்தில் எவ்வளவு சதவீதத் தொகையை இ.எம்.ஐ.யாகச் செலுத்தலாம் என்றால், மொத்த சம்பளத்தில் 40% வரை மட்டுமே செலுத்துவது சரியானது என்கிறார்கள், பொருளாதார வல்லுனர்கள்.
தோராயமாக, உங்களுக்கு 50,000 ரூபாய் சம்பளம் என வைத்துக் கொண்டால், மாதந்தோறும் அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை நீங்கள் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் இதர கடன்களுக்கு இ.எம்.ஐ.யாகச் செலுத்தலாம்.
மாதாந்திர பண ஒதுக்கீடு விதி : 50 : 20 : 20 : 10
உங்கள் சம்பளம் மாதத்திற்கு 50,000 ரூபாயாக இருக்குமானால், அதில் 50% தொகையை – அதாவது 25,000
ரூபாயை மாதாந்திர வீட்டுச் செலவுகளுக்கு என ஒதுக்கி வட வேண்டும்.
20% தொகையை – அதாவது, 10,000 ரூபாயை வீட்டு வாடகை அல்லது இ.எம்.ஐ.க்காக ஒதுக்கிவிட வேண்டும்.
மற்றொரு 20% தொகையை – அதாவது, 10,000 ரூபாயை சேமிப்பாக முதலீடு செய்ய வேண்டும்.
கடைசி உள்ள 10 சதவீதம் தொகையை – அதாவது 5,000 ரூபாயை பொழுதுபோக்கு, சுற்றுலா போன்றவற்றிறகாக செலவழிக்கலாம்.
இப்படி சம்பளப் பணத்தை, பார்த்து, பார்த்து செலவழித்தால், கடன் வாங்காமல் வரவுக்குள் செலவு செய்து, சேமிப்பையும் உயர்த்தி, வாழ்நாள் இறுதிவரை நிம்மதியாக வாழலாம்.
– இராம்குமார் சிங்காரம், Motivational speaker in chennai