fbpx
பெரிய வெற்றிக்குத் தேவை, சிறிய மாற்றங்களே ! | Big success requires small changes!

Big success requires small changes
  • May 7, 2026

நோவாக் ஜோகோ விச் (NOVAK DJOKOVIC) – டென்னிஸ் விளையாட்டை ரசிக்கும் பலருக்கும், இவர் ஒரு கதாநாயகர். உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவர். செர்பியா நாட்டைச் சேர்ந்தவர். 428 வாரங்கள் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருந்த பெருமை கொண்டவர்.

டென்னிஸ் உலகின் தரவரிசைப் பட்டியலில் இவர் 2003 ஆம் ஆண்டு, 687-ஆவது இடத்தில் இருந்தார். பிறகு 2007 ஆம் ஆண்டு, 5-ஆவது இடத்திற்கு உயர்ந்தார். பின்பு 2011 ஆம் ஆண்டு முதல் இடத்தைப் பிடித்தார்.

இந்த மாபெரும் வளர்ச்சியை எட்டுவதற்கு அவர் மேற்கொண்டது சிறிய மாற்றங்களே.

2003 ஆம் ஆண்டு 687-ஆவது இடத்தில் இருந்த போது, சராசரியாக அவர் எதிர்கொண்ட 100 பந்துகளில், 49 பாயிண்ட்களைப் பெற்றிருந்தார். அந்தப் பாயிண்ட்களின் எண்ணிக்கையை, 52 ஆக உயர்த்திய போது அவர் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார். அதை 55 ஆக உயர்த்திய போது, அவர் உலகின் முதல் இடத்தைத் தொட்டார்.

ஆக, டென்னிஸ் தர வரிசையில் உலகில் முதல் இடத்தைப் பிடிப்பதற்கு 100 பாயிண்ட்களையும் தட்டிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆறு பாய்ண்ட்களை அதிகரித்தாலே போதும் என்பதை உலகிற்கு சொன்ன முதல் டென்னிஸ் வீரர் அவர்தான்.

ஆம் ! சிறிய மாற்றங்கள் உங்களுக்கு பெரிய வெற்றிகளைத் தரக்கூடும்.

எடையைக் குறைக்க, நாள்தோறும் லிஃப்ட்டில் செல்வதற்கு பதிலாக மாடிப் படிகளில் ஏறுவது, பேருந்து நிலையத்திற்கு வாகனத்தில் செல்லாமல் நடந்து செல்வது போன்ற சிறிய செயல்கள் நாளடைவில் பெரிய மாற்றங்களைத் தரக்கூடும்.

அதுபோல் ஓய்வு நேரத்தில் செல்போனில் பாடல்களைக் கேட்காமல், புது மொழியைக் கற்றுக் கொள்வது புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தரக்கூடும்.

முயற்சித்துப் பாருங்கள் !

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai

Leave a Reply

Your email address will not be published. Please mark all required fields.