fbpx
பதவியும் பணிவும்! | Power of Humility!

power of humility
  • October 20, 2024

ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் “ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களாஎன்று அதிகாரத்தோடு கேட்டான்.

அதற்குத் துறவிகாலையிலிருந்து இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை” என்றார்.சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்துஐயாஇதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களாஎன்று கேட்டான்.

அதற்கு அத்துறவிசற்றுமுன் இவ்வழி சென்ற வீரன் ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்” என்றார்.மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன் “துறவியாரேவணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதாதயவு செய்து கூறுங்கள்” என்று பணிவோடு வினவினான்.

உடனே துறவிமன்னர் பெருமானேவணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்” என்றார்.

மிகவும் வியந்து போன அரசன்துறவியாரேதங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும்முன்னால் சென்றவர்கள் வீரன்அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்என்று கேட்டான்.அரசேமுதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார். அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது. ஆனால்தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்” என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.!பதவி வரும்போதுபணிவு வரவேண்டும் தோழா!என்ற பாடல் வரிகளை மனதில் கொள்வது எப்போதுமே பயன்தரும்.உயர்பதவியிலோதலைமைப்பதவியிலோஇருப்பவர்களுக்கு பணிவுதான் பெரும் ஆயுதம். ஒருவேளை பணிவைக்கைகொள்ளத்தெரிந்திருந்துஉழைப்பையும். கொண்டிருந்தால்அதுவேகூடநம்மைத்தேடிப்பதவியை வரவழைக்கக்கூடும்

பணிவு என்பது என்ன…காக்காய்பிடிக்க குழைவதோகாலில் விழுந்து வணங்கிநிற்பதோபணிவு என்பதாகாது. நமது சுய கௌரவத்தைவிட்டுக்கொடுக்காதுபிறரதுஉணர்வுகளை மதித்துஅவர்களது சுயமரியாதைக்குப்பங்கம்வராதவண்ணம்வார்த்தைகளை உதிர்த்துதற்பெருமை இன்றி அடக்கமாகஇருப்பதே பணிவாகும். அசோக சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத் துறவி வந்துகொண்டிருப்பதைக்கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.அதைஅரண்மனைக்குவந்ததும் மன்னரிடமேவெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்ஒரு ஆட்டுத்தலைஒரு புலித் தலைஒரு மனிதத் தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு விநோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் வந்து சேர்ந்தன. மன்னர் மூன்றையும் சந்தையில்விற்றுவரச்சொன்னார். ஆட்டுத் தலை உடனே விலை போயிற்று.புலித் தலையைவாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டுச்சுவற்றில்பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.

ஆனால்மனிதத்தலையைக்கண்டு எல்லோரும்அஞ்சிப் பின் வாங்கினர்முகம் சுழித்து ஓடினர்.விபரங்களைமன்னரிடம் சொன்னபோதுஅதைஇலவசமாகவாவதுகொடுத்துவிடுங்கள்!என்றார். இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.இப்போது அசோகர் சொன்னார். “தளபதி! மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறதுஇறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரிகிறது. உடலில் உயிர் இருக்கும்போதேதம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள். அத்தகைய ஞானிகளின் பாதத்தில் விழுந்து வணங்குவதில்என்ன தவறு இருக்க முடியும்தளபதிக்குமன்னரின் பணிவுக்கான

அர்த்தம் புரிந்தது.

  • இராம்குமார்சிங்காரம்

Comments are closed.