சேமிக்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் ஆர்டரில் சேமிக்கத் தொடங்கலாம்.
உடல் நலக் குறைவாலோ /விபத்தாலோ திடீரென மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள நேரிட்டால், பணத் தேவையைச் சமாளிப்பதற்கு உதவும் காப்பீடு இது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம், 5 லட்ச ரூபாய் அளவிற்காவது ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். காப்பீட்டுத் தொகையின் மதிப்பு 5 லட்சம் என்றாலும் இதற்கு ஆகும் வருடாந்திர முதலீடு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை தான் இருக்கும். எதிர்கால அவசர மருத்துவத் தேவைகளுக்காக, நிகழ்காலத்தில் நிதி ஒதுக்க வேண்டிய அவசியத் திட்டம் இது.
வருமானம் ஈட்டுகிற ஒருவர், ஒருவேளை திடீரென இறக்க நேரிட்டால், அவரது குடும்பத்திற்கான வருவாய் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் காப்பீட்டுத் திட்டம். சம்பாதிக்கிற ஒவ்வொரு ஆண் அல்லது பெண்ணிற்கும், அவரவரது ஆண்டு வருவாயை விட, 20 மடங்கு வரை டேர்ம் இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். இடர்கள் நிறைந்த வாழ்க்கைக்கு, இடரில்லா வருவாயைத் தரக்கூடிய திட்டம் இது.
சேமிப்பு, வரிச் சலுகை, இழப்பை ஈடுகட்ட பண உதவி என அனைத்து நன்மைகளும் உள்ள சேமிப்புத் திட்டம் இதுவாகும்.
கடந்த 30 ஆண்டுகளில் தோராயமாக ஆண்டுக்கு 15 % வருவாயைத் தந்திருக்க கடிய – பங்குச் சந்தை சார்ந்த, இடர்கள் நிறைந்த முதலீட்டுத் திட்டம் இது. சிறு தொகையை, மாதந்தோறும் இதில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம்.
பெண்களுக்கு பிடித்த மஞ்சள் உலோகமான இதில், அவசரத்திற்கு பணத்தைப் பெறவும், தோராயமாக 6 முதல் 7 சதவீத லாபத்தை ஈட்டவும் முதலீடு செய்யலாம். இவற்றை விற்பதும், வாங்குவதும் மிக மிக எளிது. ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தால், ஆண்டிற்கு, 2.5 % வட்டி கிடைக்கும். கிடைக்கும் வருவாய்க்கும் வரிச் சலுகை உண்டு.
இது போன்ற இன்னும் சில முதலீட்டுத் திட்டங்களை அடுத்து இதழில் பார்ப்போம்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in chennai