நமக்கு சில விஷயங்களைச் செய்வதற்கு விருப்பம் இருக்கும். ஆனால் அதைச் செய்ய விடாமல் தயக்கம் தடுக்கும். இதற்குத் தீர்வு தான் என்ன ?
மெல் ராபின்ஸ் (MEL ROBBINS) என்கிற எழுத்தாளர் சொல்கிற தீர்வு என்ன தெரியுமா ? “ஐந்து வினாடி மந்திரம் !”. அவர் இது பற்றி ‘தி 5 செகண்ட் ரூல்’ (THE 5 SECOND RULE) என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்.
அதில் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா ?
நீங்கள் நீச்சல் குளத்தில் குதிக்க விரும்புகிறீர்கள். ஆனால் தயக்கம் தடுக்கிறது. உடனே உங்கள் பயிற்சியாளர் என்ன செய்வார் ?
ஐந்து…,
நான்கு…,
மூன்று…,
இரண்டு…,
ஒன்று !
என கவுண்ட் டவுன் செய்வார். நீங்களும், ‘ஒன்று !’ என்றவுடன், உங்களையும் அறியாமல், நீச்சல் குளத்தில் குதித்து நீந்தத் தொடங்கி விடுவீர்கள்.
இந்தப் கவுன்ட் டவுன் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த மந்திரத்தைச் சொல்லித் தான் ராக்கெட்டையே பறக்க விடுகிறார்கள், விஞ்ஞானிகள். அப்படி என்றால் நாமும் ஏன் இந்த மந்திரத்தைப் பின்பற்றக் கூடாது ? என்கிறார், மெல் ராபின்ஸ்.
நீங்கள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். அலாரம் வைக்கிறீர்கள். அலாரம் அடித்தவுடன், தயக்கம் தடுக்கிறது. உடனே, ஐந்து…, நான்கு…, மூன்று…, இரண்டு…, ஒன்று ! என கவுண்ட் டவுன் சொல்லி எழுந்திருத்துப் பாருங்கள். இந்த மந்திரம் பிரமாதமாக வேலை செய்வது உங்களுக்கே தெரியும்.
ஆம் ! உங்கள் தயக்கம் தகரும். விருப்பம் நிகழும். பிறகென்ன….. சக்சஸ் தான் !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu