fbpx
பணத்தைக் காதலிப்போம்! | Let’s Love Money!

let us love money
  • December 1, 2024

‘SECRETS OF THE MILLIONAIRE MIND’ என்ற பிரபல ஆங்கில நூலை எழுதிய T. HARV EKER, “பணம் சார்ந்த எதிர்மறை சிந்தனைகளே, நம்மை பணக்காரர்கள் ஆக விடாமல் தடுக்கிறது” என்கிறார்.

சற்று விரிவாகப் பார்ப்போம்…

பொதுவாகவே, நம் எல்லோருக்கும் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

ஆனால், “நிறைய பணம் வந்துட்டா இன்கம் டாக்ஸ் ரெய்டு வரும்… சொந்தக்காரங்க வந்து கடன் கேப்பாங்க… திருடன் பணத்தை திருடிட்டு போயிடுவான்… நமக்கு அகம்பாவம் வந்துரும்… எதிர்த்த வீட்டு பணக்காரிய மாதிரி திமிரு புடிச்சு அலைவோம்… நம்ம பிள்ளைங்க தறுதலையா ஊர் சுத்துங்க… அதனால நிறைய பணம் எல்லாம் வேணாம் சாமி” என்பது தான் நம்முடைய பொதுவான சிந்தனை. இதனால் தான் நாமெல்லாம் கோடீஸ்வரர்கள் ஆகாமல் இருக்கிறோம்.

ஆனால், கோடீஸ்வரர்களின் மனநிலை என்ன தெரியுமா ?

“கோடிக்கணக்கில் பணம் இருந்தால், நாம் நினைத்த வாழ்க்கையை வாழ முடியும். நம் கனவுகளை அடைய முடியும். நம்மால் பலருக்கும் உதவ முடியும். நமக்கு சபையில் மதிப்பு கிடைக்கும். சென்ற இடமெல்லாம் பட்டுக் கம்பள வரவேற்பு இருக்கும். எங்கும் வரிசையில் காத்து நிற்கத் தேவையில்லை. கனவை நினைவாக்க முடியும். நம் பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த – தரமான கல்வியைக் கொடுக்க முடியும்” என்றெல்லாம் பாசிட்டிவாகவே சிந்திக்கிறார்கள்.

அதனால், பணத்தை அவர்கள் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

யார் விரும்புகிறார்களோ, அவர்களிடம் சென்று சேர்வது தான் பணத்தினுடைய இயல்பு. அந்த வகையில் பணமும், கோடிக்கணக்கில் அவர்களை சென்றடைகிறது.

ஆம் ! நீங்களும் T. HARV EKER சொல்வது போல், பணம் சார்ந்த எதிர்மறை விஷயங்களைத் தவிர்த்து விட்டு, நேர்மறை விஷயங்களை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். உங்களைத் தேடியும் “கோடீஸ்வரி” வந்து சேர்வாள் !

 

– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.