THE VISION BOARD BOOK என்ற நூலை எழுதிய JOHN ASSARAF சொல்கிற ஒரு வெற்றி தரும் உத்தி என்ன தெரியுமா ? “பேச்சு”
பொதுவாக நம்மில் பலரும் எப்போதும் என்ன பேசிக் கொண்டே இருப்போம்…?
நாம் பார்த்த சினிமா, நமது அண்டை வீட்டுக்காரர்கள் பற்றிய தகவல், அரசியல், நாட்டு நடப்பு, கிரிக்கெட், சமையல், ஷாப்பிங்… என பிறவற்றைப் பற்றியும், பிறரைப் பற்றியும், பிற பொருள்களைப் பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம்.
வெற்றியாளர்கள் பிறவற்றைப் பற்றி பேசுவதே இல்லை. தங்களைப் பற்றியே பேசுகிறார்கள்… தாங்கள் என்ன பொருளை விற்கிறோம் ? தங்கள் என்ன சேவை செய்கிறோம் ? தங்களுடைய சிறப்பு இயல்பு என்ன ? தங்களால் எதையெல்லாம் சிறப்பாகச் செய்ய முடியும் ? தாங்கள் எப்படி பிறருக்கு உதவ முடியும் ? தமக்கு என்ன தேவைப்படுகிறது ?…… இப்படி அவர்களுக்குள் என்ன இருக்கிறதோ, அதையே பேசுகிறார்கள். வெளி உலகத்தைப் பற்றிப் பேசுவதே இல்லை. அது நேர விரயம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.
எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் தம்மை முன்னிலைப்படுத்த அவர்கள் தவறுவதே இல்லை. எங்கெல்லாம் மேடை கிடைக்கிறதோ, அங்கெல்லாம் தம்மைப் பிரகடனப்படுத்த வெட்கப்படுவதே இல்லை. தம்மைப் பற்றி வெளியில் சொன்னால் தான் தமக்கு வாய்ப்புகள் வரும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பேசும்போது, அவர்களுக்கு வெட்கம், கூச்சம் போன்றவை ஒருபோதும் ஏற்பட்டதே இல்லை.
ஆம் ! நாமும் புரளி பேசுவதை நிறுத்துவோம். நம்மைப் பற்றி பேசத் தொடங்குவோம். என்ன பேசுகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம் வெற்றி !
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker in tamil nadu