fbpx
 எண்ணங்களே வாழ்க்கை ! | YOU THINK, SO YOU ARE.

motivational speaker in tamil
  • September 30, 2022

ஒரு ஊரில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. மக்களெல்லாம் பொங்கி எழுந்து இறைவனிடம் சென்று முறையிட்டனர். 

இவர்களின் நிலை கண்டு பரிதாபப்பட்ட இறைவன், சற்று மனமிரங்கி, பணக்காரர்களிடம் இருந்த பணத்தை எடுத்து ஏழைகள் எல்லோருக்கும் பகிர்ந்தளித்தான். 

பத்து ஆண்டுகள் கழிந்தன. அவர்களின் நிலையை அறிய ஆவலுடன் இறைவன் அந்த ஊருக்குச் சென்றான். முன்பு யாரெல்லாம் ஏழைகளாகவும், எவரெல்லாம் பணக்காரர்களாகவும் இருந்தார்களோ அவர்களே திரும்பவும் ஏழைகளாகவும், பணக்காரர்களாகவும் மாறி இருந்ததைக் கண்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டான். 

இந்தச் சிரிப்புக்குக் காரணம் என்ன தெரியுமா? அவரவரது எண்ணங்கள் தான்! 

இதெல்லாம் வெறும் கதைஎன்று நீங்கள் நினைத்தாள், ஒரு உண்மைச் சம்பவத்தையும் நாம் பார்ப்போம். : 

 இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் உளவியல் துறையினர் வித்தியாசமான ஆய்வினை மேற்கொண்டனர் 

அங்கு படித்துக் கொண்டிருந்த சுமார் 600 மாணவர்களிடம் அவர்களுடைய எதிர்காலத் திட்டங்கள் பற்றி குறிப்பெடுத்தனர். 

25 ஆண்டுகள் கழித்து திரும்பவும் அதே மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களின் நிலை என்ன என்பதைக் கேட்டறிந்தபோது, மிகப் பெரிய ஆச்சரியம் அவர்களுக்கு ஏற்பட்டது. 

அதாவது 600 பேரில் இருபது விழுக்காட்டினர் வாழ்வின் உச்சத்தில் இருந்தனர். முப்பது விழுக்காட்டினர் வாழ்வின் தாழ்வு நிலையில் வாழ்த்து வந்தனர். மீதமுள்ள ஐம்பது விழுக்காட்டினர் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் நடுத்தர நிலையில் இருந்தனர். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால், வெற்றி பெற்ற இருபது விழுக்காட்டினர்தான் 25 ஆண்டுகளுக்கு முன்பே தாம் என்னவாக  வேண்டும் என்கிற தெளிவைக் கொண்டிருந்தனர். 

வாழ்க்கையின் தாழ்வு திணையில் இருந்த முப்பது விழுக்காட்டினர் 25 ஆண்டுகளுக்கு முன்பே எதிர்மறைச் சிந்தனைகளோடுதான் இருந்தனர். மீதமுள்ள  பெரும்பாலா ளோர் பெரிய எண்ணங்களோ திட்டங்களோ இல்லாமல், அதே நேரம் போகிற போக்கில் வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையோடு இருந்தனர். 

எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன என்ற சிந்தனையை, உலகம் உணர்ந்தது இந்த ஆய்விற்குப் பிறகுதான். 

உங்களிடம் ஒரு கேல்வி. 

முதலில் பேப்பரையும், பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். 

 உங்களோடு 12 ஆம் வகுப்பு படித்த 10 மாணவர்களின் பெயர்களை வரிசையாக எழுதுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் அதற்கு அருகிலேயே எழுதிக் கொள்ளுங்கள். 

இப்போது யோசித்துப் பாருங்கள்எல்லோரும் ஒரே பள்ளியில், ஒரே விதமான ஆசிரியர்களிடம், ஒரே சூழலில் ஒரே காலகட்டத்தில் வளர்ந்தீர்கள். அப்படியானால், இன்றைக்கு எல்வோரும் ஒரே நிலையில் அல்லலா இருக்க வேண்டும்? 

ஆனால் உண்மை நிலை என்ன? ஒருவர் கோடீஸ்வரராகவும், ஒருவர் லட்சாதிபதியாகவும். ஒருவர் அரசு ஊழியராகவும், ஒருவர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராகவும், ஒருவர் தந்தையாருடய தொழிலில் ஈடுபட்டிருப்பவராகவும், ஒருவர் ஏழையாகவும் வெவ்வேறு நிலைகளில் இருப்பதை நீங்கள் உணர முடியும். 

இதற்குக் காரணம் என்ன 

அவரவருடைய எண்ணமும், அவரவருடைய  நம்பிக்கையும் தான்! 

YOU THINK, SO YOU ARE என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. தமிழில் கூட, ‘நீங்கள் எதுவாக ஆக நினைக்கிறீர்களே அதுவாகவே ஆவீர்கள்என்றும் சொல்வது உண்டு 

ஆக, குழலைக் காட்டிலும், கல்வியைக் காட்டிலும், காலகட்டத்தைக் காட்டிலும், மிக முக்கியமானவை  நம்முடைய எண்ணங்கள்தான். நீங்கள் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும். ஆனால், நமக்கு உள்ள பிரச்சனையே, நமக்கு எதையுமே பெரிதாக நினைக்கத் தெரியாததுதான். 

என் நண்பனைப் போலத்தான் நானும் பணக்காரனாக வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அவன் ஆகிவிட்டான்; என்னால் முடியவில்லையே ஏன்?’ என்று நீங்கள் கேட்கலாம். 

நீங்கள் பெரிதாக நினைத்தால் மட்டும் போதாது. அதை உண்மை என்று உங்கள் மனம் நம்பவும் வேண்டும். அப்படி உங்கள் மனதை நீங்கள் நம்பச் செய்யாத காரணத்தால்தான், உங்களால் அவரைப் போல ஆக முடியவில்லை. 

எடுத்துக்காட்டாக, அதே +2 வகுப்புத் தோழர்களில்ஒருவரை எடுத்து கொள்ளுங்கள். அவர் ஏன் உங்கள் அளவிற்கு வாழ்வில் உயர முடியவில்லை என்று யோசியுங்கள். 

உங்கள் அளவிற்கு அவர் சிந்திக்காததும், அப்படி தன்னால் உயர முடியும் என்று அவர் நம்பாததும்தான் காரணம் என்பதை நீங்கள் உணர்வீர்கள். 

அடுத்த கேள்விஅடுத்த 20 ஆண்டுகளில், உங்களுக்கு மொத்தமாக எவ்வளவு பணம் தேவைப்படும்?’ என்று யோசித்து அதே பேப்பரில் விடை எழுதுங்கள் 

பொதுவாக நீங்கள் எழுதி இருக்கக்கூடிய விடை 20 லட்சம் ரூபாயிலிருந்து, 1 கோடி ரூபாய்க்குள்ளாகத்தான் இருக்கும். அதற்கும் அதிகமாக எழுதியிருந்தால் உங்களுக்கு நமது வாழ்த்துக்கள் உங்கள் மனம் சற்று பெரிதாகச் சிந்திக்கும் தகுதியைக் கொண்டிருக்கிறது. 

ஆனால், பொதுவாக எல்லோரும் சிறிதாகத்தான் சிந்திக்கிறார்கள். ஏனெனில் காலம் காலமாகவே  நம்முடைய மனம் சிறிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டது. ‘அளவுக்கு அதிகமாக ஆசைப்படாதே‘, ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, பேராசை பெருநஷ்டம் என்றெல்லாம் நம் மனதில் பதிந்துள்ள எதிர்மறை எண்ணங்களே இதற்குக் காரணம். 

மேலும், நம் மனதில் தோல்வியுற்றோரின் பிம்பங்கள் ஆழமாகப் பதிந்திருப்பதால், அதிகம் ஆசைப்பட்டால் நாமும் தோற்று விடுவோம் என்ற பயம் ஏற்பட்டு விடுகிறது 

சித்திக்கவே முடியாவிட்டால் பிறகு நாம் எப்படி சம்பாதிப்பது? எனவே முதலில் நீங்கள் பெரிதாகச் சிந்திக்க வேண்டும்; பிறகு அதனை அடைய முடியும் என்றும் நம்பவேண்டும். 

இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது வாழ்க்கையில் இதுவரை நீங்கள் அடைந்த வெற்றிகளைப் பேப்பரில் பட்டியலிட வேண்டும். சின்ன வயதில் ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் ஆறுதல் பரிசாக வென்ற சோப்பு டப்பாவில் இருந்து. நேற்று நீங்கள் அடைந்த வெற்றி வரை எல்லாவற்றையும் பட்டியலிடலாம் அடுத்து, இவற்றை நாள்தோறும் ஒருமுறையாவது புரட்டிப் பாருங்கள். இப்படிச் செய்வதால், உங்கள் மனதிற்கு நீங்கள் இனிமேல் அடைய விரும்பும் இலக்குகளையும், இது போன்று நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை அழுத்தமாக ஏற்படும். எனவே, எவ்வளவுக்கெவ்வளவு  அதிக எண்ணிக்கையில் வெற்றிகளை நீங்கள் நினைவு கூர்ந்து பட்டியலிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் மனம் தம்மாலும் சாதிக்க முடியும் என்று நம்பத் தொடங்கும். முயற்சித்துப் பாருங்கள்!

 

                                 ————— இராம்குமார் சிங்காரம், Motivational speaker in tamil 

Comments are closed.