fbpx
டெல் டெக்னிக் | The Technique of Dell Technologies

The technique of dell technology
  • July 1, 2022

ஆர்தர் கார்டன் (Arthur Garden)  என்பவர் ஒரு புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். அவர் ஒருமுறை டாக்டர் பிளாட்டன் (Dr. Blaton)  என்ற முதிர்ந்த அனுபவம் கொண்ட உளவியல் வல்லுநரைச் சந்தித்து உரையாடச் சென்றார். உணவகம் ஒன்றில் டாக்டர் பிளாட்டனின் வருகைக்காக சிறிது நேரம் காத்திருந்த ஆர்தர், தமது வாழ்க்கையின் பழைய நினைவுகள் குறித்து சிந்திக்கத் தொடங்கினார். 

அந்த இடத்திற்கு டாக்டர் பிளாட்டன் வந்ததைக் கூட கவனிக்காமல், சிந்தனை வயப்பட்டிருந்த ஆர்தரை செல்லமாக தட்டி கை குலுக்கினார். டாக்டர் பிளாட்டன் 

என்ன…  ஆழ்ந்த சிந்தனை?” என்றார் டாக்டர். 

ஒன்றும் இல்லைபழைய நினைவுகளை அசை போட்டேன் 

என்ன அசை போட்டீர்கள்?”. 

அதாவது, நான் எழுத்தாளனாகி இருக்காவிட்டால், என் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று யோசித்தேன் டாக்டர்.” 

 ஆர்தர், அப்படி யோசிக்காதீர்கள்என்னிடம் வரும் மனநோயாளிகளில் பலர் தங்களது கடந்த காலத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பவர்கள்தான். 

அதனால் எந்த பலனும் இல்லை என்பது அவர்களுக்கு புரிவதில்லை. ஒரு வெற்றியாளன்அடுத்து என்னஎன்று தான் யோசிப்பான். எனவேஅப்படி இருந்திருந்தால்என்று கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதற்கு பதிலாக, இனி அடுத்தது என்ன?’ என்று எதிர்காலம் பற்றி யோசிப்பீர்களேயானால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்என்றார். 

தாம் கேட்க நினைத்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்த திருப்தியில் எழுந்து போனார் ஆர்தர் கார்டன். 

ஆம் நண்பர்களே! முடிந்துபோன செலவுகளைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மன வருத்தமே மிச்சமாகும். அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அடுத்து வரும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று சிந்திக்க வேண்டும் 

அந்தக் காலத்தில் ரூ.100 மாதச் சம்பளத்தில் கூட ஆட்கள் வேலைக்கு கிடைத்தார்கள்என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. நவீன யுகத்துக்கு ஏற்ப நாம் யோசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அப்படி யோசித்ததால் தான்டெல்’ (Dell) என்ற அமெரிக்க கம்ப்யூட்டர் உற்பத்தி நிறுவனம் மாபெரும் வெற்றி பெற்றது. இதோ, ‘டெல்லின் வெற்றிக் கதை. 

மைக்கேல் டெல் என்ற மாணவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் மோடம் (Modem), ஹார்ட் டிஸ்க் டிரைவ் (Hard Disk Drive) போன்றவற்றை உருவாக்கி, அவற்றின் உதவியோடு கம்ப்யூட்டர்களை அசெம்பிள் செய்து விற்கத் தொடங்கினார். இவர் உருவாக்கிய கம்ப்யூட்டர்கள், அன்றைக்கு சந்தையில் முன்ன ணியில் இருந்த .பி.எம் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களை விட, 40% விலை குறைவாக இருந்ததால் பிசினஸ் சூடுபிடித்து. மைக்கேலின் கவனம் அனைத்தும் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதிலேயே இருந்ததால் கல்லூரி பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் தேர்வில் தோற்று போனார். 

இருப்பினும் வணிகம் பிரமாதமாகபிக்கப்ஆனதால் அதில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1989-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மொத்த கம்ப்யூட்டர் விற்பனையில் .பி.எம் நிறுவனம் 17 விழுக்காடையும், ஆப்பிள் நிறுவனம் 11 விழுக்காடையும், பிராண்ட் இல்லாத மிகச் சிறிய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் 62 விழுக்காடு சந்தையையும் ஆக்கிரமித்திருந்தன. அப்போது டெல் 1 விழுக்காடு கூட கைப்பற்றவில்லை. .பி.எம்மைப் பொறுத்தவரையில் அது ஆப்பிளுக்கு அடுத்த படியாக, காம்பாக்கையும், எச்.பியையும் தான் தன்னுடைய பெரிய போட்டியாளராக எண்ணியிருந்தது. 

1995-ஆம் ஆண்டில் தான் டெல் ஒரு பெரிய நிறுவனமாக, வளரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக, கம்ப்யூட்டர் வல்லுனர்கள் கருதத் தொடங்கினர். அப்போது, காம்பாக் மற்றும் ஆப்பிள் தலா 11 விழுக்காடு சந்தையையும், எச்.பி 14 சதவீத சந்தையையும், .பி.எம் 8 விழுக்காடு சந்தையையும், பிராண்ட் இல்லாத சிறிய விற்பனையாளர்கள் 40 விழுக்காடு சந்தையையும் கைப்பற்றி இருந்தனர். 

ஆறே ஆண்டுகளில் .பி.எம் மைக் கலங்கடிக்கச் செய்து, அமெரிக்காவின் 5 விழுக்காடு கம்ப்யூட்டர் சந்தையைக் கைப்பற்றிய டெல்லின் வெற்றிப்பயணம், இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் சந்தைலேயே, அதிக லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமும் டெல் தான். இதற்கெல்லாம் பின்னணிக் காரணம், டெல்லின் செலவைக் குறைக்கும் புது விதமான அணுகுமுறைகளே. 

டெல்  கையாண்ட சில அணுகுமுறைகள் 

டெல் நிறுவனத்திற்கு டீலர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், ரீடெய்லர்கள், ஷோரூம்கள் என எதுவும் ஆரம்பத்தில் கிடையாது. தாமே நேரடியாக விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த தொகைக்கு விற்க முடிந்தது. 

கம்ப்யூட்டர்களைப் பற்றி ஓரளவே தெரிந்த, அதிக எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்களை வாங்கக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பர்ச்சேஸ் மானேஜர்கள்தான் டெல்லின் இலக்கு. 

தொடர்ந்து ஒரே நகரில் அதிக எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்களை விற்றால், அப்பகுதியிலேயே தனியாக ஒரு தொழிற்சாலையும் தொடங்கி சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைத்தது, டெல். 

தொடக்கத்தில் அதிகமான கம்ப்யூட்டர் விற்பனை. www.dell.com என்ற இணையதளம் மூலமே நடைபெற்றது. இதனால்டெல்நிறுவன மார்க்கெட்டிங் செலவுகள் கணிசமாகக் குறைந்தன. 

வாடிக்கையாளர்களின், ஆர்டர்களுக்கு ஏற்பவே உற்பத்தி செய்ததால், கம்ப்யூட்டர்களை ஸ்டாக் செய்யும் நடைமுறை மூலதனமும் குறைந்தது. கொள்முதல் செய்யும்போது கூட, அனாவசியமாகப் பொருட்களை வாங்கி அடுக்கி வைக்காமல், கேட்டவுடனேயே சப்ளை செய்யும் அளவுக்கு, கச்சாப் பொருள் சப்ளையர்களைப் பெற்றது. 

இவற்றால் டெல்லின் செலவு கணிசமாகக் குறைந்த உடன், வாடிக்கையாளர்களின் நேரடித் தொடர்பால், அவர்களது தேவையை அவ்வப்போது உணர்ந்து கொள்வதும், அவர்களுக்கு கேட்ட மாத்திரத்திலேயே சேவைகளை வழங்குவதும் டெல்லுக்கு சாத்தியமானது. 

இன்னும் புள்ளிவிவரத்தோடு இதை விளக்க வேண்டுமானால், கம்ப்யூட்டர் துறையில், கச்சாப் பொருட்களின் விலை, மாதந்தோறும் ஒரு சதவீத அளவு குறைவது வழக்கம். இதனால் அவ்வப்போது பொருட்களை வாங்குவதே புத்திசாலித்தனமாகும். 

டெல் நிறுவனத்தின் குடோனில்  அடுத்த 4 நாட்களுக்குத் தேவைப்படும் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஸ்டாக்கில் இருக்கும். ஆனால் காம்பாக் நிறுவனத்திலோ அடுத்த இருபத்தி நான்கு நாட்களுக்கு தேவைப்படும் கம்ப்யூட்டர்கள் ஸ்டாக் செய்யப்பட்டிருந்தன. 

இதனால் டெல் நிறுவனத்தால் ஒரு கம்ப்யூட்டரை, தன்னுடைய போட்டியாளர்களை விட, 10% குறைவான விலைக்கு விற்க  முடிந்தது. இது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக ஆர்டர்களைப் பெற டெல்லுக்கு உதவியது. 

இதுவே டெல்லின் வெற்றிக் கதை. எனவே, செலவைக் குறைப்பதும், தொழிலை வளர்த்தெடுக்க உதவும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

                                         —————– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.