மனம் திறந்து பாராட்டுங்கள் ! அறிவாளிகள் உங்களிடம் வெறும் ஊதியத்தை மட்டும் எதிர்பார்ப்பதில்லை. அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் பணக்காரராக ஆக வேண்டுமானால், உங்களைச் கற்றியுள்ளோரின் திறமைகளை இனம் கண்டு அவர்களைப் பாராட்ட வேண்டும். மனிதர்கள் பணத்தைவிட பாராட்டுக்குதான் அதிகம் ஏங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாக, உங்களை இதற்கு முன் யாராவது பாராட்டிய போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்பதை யோசித்துப் பார்த்தாலே இந்த உண்மை புரியும்.
இந்தியர்களிடம் பொதுவாக பாராட்டுகிற குணம் குறைவு, பிறரைப் பாராட்டுவதால், நாம் தாழ்ந்து விடுவதாக எண்ணுகிறோம் ஆனால் அது உண்மையில்லை. பாராட்டு என்பது அவரது திறமையை அங்கீகரிப்பது அவ்வளவே ! மேலும், பாராட்டுவது என்றாலே, அது ‘ஜால்ரா போடுவது’ என்று நாம் கேலியாக எண்ணத் தொடங்கி விடுகிறோம் எதையோ எதிர்பார்த்து பாராட்டுவதற்குதான் ‘ஜால்ரா போடுவது’ என்று பொயர். எதையும் எதிர்பார்க்காமல் பாராட்டுவதை உங்கள் இயல்பாக்கிக் கொண்டால் போதும். நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருவரையாவது
பாராட்டிப் பழகுங்கள். பாராட்டு பெறுவோர், உங்களுக்கு மிக வேண்டப்பட்டவர்களாக மாறும் மேஜிக்கை நீங்கள் காண முடியும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker