நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க விரும்புகிறீர்கள்? என்பதற்கு முன்னதாக எங்கு நோக்கி பயணிக்க விரும்புகிறீர்கள் என்ற தெளிவு தேவை.
இந்த பஸ் எங்கே போகும்?“
“இந்த சினிமா எத்தனை மணிக்கு முடியும்?
“இந்தப் படிப்பு எத்தனை ஆண்டுகள்?”
“இந்த வேலைக்குச் சேர்ந்தால் எனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?“
இப்படி எல்லா நேரங்களிலும் இலக்குகள் குறித்து நாம் தெளிவாகக் கேள்விகள் கேட்கிறோம் .ஆனால் வாழ்க்கையை வடிவமைக்கும் போது மட்டும் இந்தக் கேள்விகளைக் கேட்பதில்லை.
தம் பிள்ளைகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அல்லது பத்து ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொடுக்கிற நாம் அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் எங்கே இருக்க வேண்டும் என்று சிந்திப்பதில்லை. காரணம், சிந்திக்கத் தொடங்கி விட்டால் அதற்குரிய கடுமையான BR.ழைப்பைக் கொடுத்தாக வேண்டும் அல்லவா?
கோல் போஸ்ட் இல்லாத கால்பந்து விளையாட்டையோ, ஸ்டம்ப் இல்லாத கிரிக்கெட் விளையாட்டையோ நம்மால் யோசித்துப் பார்க்க முடியுமா? விளையாட்டுக்குக்கூட இலக்கு முக்கியமானதாக இருக்கும்போது வாழ்க்கைக்கும் இலக்கு அவசியம்தானே?
இலக்கு இல்லாத வாழ்க்கை என்பது திசையற்ற பயணத்தைப் போன்றது. எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான், எந்தப் பேருந்தில் ஏறுவது என்று முடிவெடுக்க முடியும்.
ஒரு முறை பணத்திற்கும், அறிவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பணம் சொன்னது: ‘நான் இல்லாவிட்டால் பொருள் வாங்க முடியுமா? சாப்பிட முடியுமா? குழந்தைகளைப் படிக்க வைக்க முடியுமா? வாழ்க்கையை வாழத்தான் முடியுமா? என்று.
அறிவு அதை மறுத்தது. ‘பொருளை வாங்க வேண்டுமானால், எந்தக் கடையில் எந்த விலையில், எவ்வளவு வாங்க வேண்டுமென்று முடிவு செய்ய அறிவு தேவை அல்லவா? சாப்பிட வேண்டுமானால் எனதச் சாப்பிடுவது என்று முடிவு செய்ய அறிவு வேண்டாமா? பிள்ளைகளைப் படிக்க வைக்கும்போது எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பை படிக்க வைப்பது என்று சிந்திக்க அறிவு வேண்டாமா? அறிவு இல்லாமல் செய்யப்படும் எந்தச் செயலும் தோல்வியையே தழுவும் எனவே “நாவே உயர்ந்தவன்” என்றது.
வாக்குவாதம் முற்றி இரண்டும் ஒரு துறவியிடம் சென்றன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட துறவி சொன்னார்; ‘இருவருமே உயர்ந்தவர்கள்தான் எவர் ஒருவர் உங்கள் இருவரையும் நல்ல குறிக்கோளுக்காகப் பயன்படுத்துகிறாரோ, அப்போது இருவருமே உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பிர்கள்.“
ஆம் அறிவு பணம் உழைப்பு. சக்தி என பல நற்குணங்கள் தம்மிடம் இருந்தாலும் அவற்றை சரியான இலக்கிற்காகப் பயன்படுத்த வேண்டும்.
——————–இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker