இரு பாகிஸ்தானியர்கள் வாஷிங்டனிலிருந்து நியூயார்க் செல்லும் விமானத்தில் ஏறி, ஒருவர் ஜன்னலை ஒட்டிய இருக்கையிலும், இன்னொருவர் நடு இருக்கையிலும் அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு பருமனான சர்தாஜி அந்த பாகிஸ்தானியர்கள் பக்கத்தில் இருந்த (நடையை ஒட்டிய) இருக்கையில் அமர்ந்தார்!
அமர்ந்தவுடன், தன் கால்களை சற்று இளைப்பாற்ற காலணிகளை களைந்து சற்று கண்ணயர்ந்தார். சிறிது நேரத்தில் ஜன்னலருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தானி, “நான் சென்று ஒரு கோக் எடுத்து வருகிறேன்” என்றார்.
உடனே நம் சர்தார்ஜி, “நீங்கள் இருங்கள், நான் போய் எடுத்து வருகிறேன்!” என்று கூறி காலுறைகளுடன் நடந்து சென்றார். சர்தார் சென்றவுடன், அந்த பாகிஸ்தானி, சர்தாரின் காலணிக்குள் எச்சில் துப்பி, வைத்து விட்டார். சர்தார் கோக்குடன் வந்தவுடன்,
இன்னொரு பாகிஸ்தானி, “எனக்கும் கோக் அருந்த வேண்டும் போலுள்ளது” என்றவுடன், சர்தார் தாராள மனதுடன், ‘கவலைப்படாதீர்கள்! உங்களுக்கும் ஒன்று எடுத்து வருகிறேன்!” என்று மறுபடியும் சென்றார்.
அந்த நேரத்தில், அதே பாகிஸ்தானி இப்போது சர்தாரின் மற்றொரு காலணியிலும் எச்சில் துப்பி வைத்து விட்டார்! இந்திய சர்தார் இதை அறியவில்லை. மூவரும் கோக் அருந்திக் கொண்டு சிறிது நேரம் தத்தமது நாட்டின் பெருமை பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், விமானம் தரை இறங்கத் தொடங்கியது.
சர்தார் காலணிகளுக்குள் தன் கால்களை நுழைத்தவுடன், ஈரமாக எதுவோ தட்டுப்பட்டது. பாகிஸ்தானியர்களைப் பார்த்தார். வேடிக்கை பார்த்தபடி இருப்பதுபோலத் தோன்றினாலும், ஓரக்கண்ணால் சர்தாரின் அவஸ்தையை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தனர் அவர்கள். இந்தியர், நடந்த நிகழ்வை யூகித்துப் புரிந்து கொண்டு மிகுந்த வேதனையுடனும் மனவலியுடனும் பாகிஸ்தானியர்களை பார்த்து கூறினார்.
இன்னும் எவ்வளவு நாள் நீடிக்க வேண்டும்..? நம்மிடையே நிலவும் இந்த் பகை… வெறுப்புணர்வு.. காலணிகளுக்குள் எச்சில் துப்புதல், கோக்கில் சிறுநீர் கழித்தல் !!! என்று வெறுப்புடன் கூறினார் பாகிஸ்தானியர்களின் அடிவயிறு கலங்கியது. அப்புறம் என்ன, வாந்திதான்
இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும், இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தையாக இருந்தாலும், ரத்தத்தில் ஊறிய இந்த வெறுப்பு மரபணுக்கள் வரை சென்று விட்டது. அதுபோலத்தான், வியாபார உத்திகளும், வெற்றியும் பரம்பரையாக நம்முன் இருப்பவை. தாத்தா காலத்துத் தொழிலை பேரன்கள் வெற்றிகரமாக எடுத்துச் சொல்வதும் அவரைப் போன்றே வித்தியாசமாகச் சிந்திப்பதும் ரத்தத்தில் கலந்திருக்கும். அதனை நாம் எந்த அளவு பயன்படுத்துகிறோமோ, அந்த அளவு பெரிய வெற்றியைப் பெற முடியும்.
வியாபாரம்தான் என்றில்லை. எந்த ஒரு காரியமானாலும், நாம் எவ்வளவு நேரத்தை செலவழிக்கிறோமோ, அதே அளவு நமக்கான வருமானமும் எதிர்பார்க்கும் வெற்றியும் கிடைக்கும். நேரத்தை குறைக்கக் குறைக்க வெற்றியின் அளவும் குறையும் என்பதே வெற்றி ஃபார்முலா. எனவே, செய்யும் வேலை எதுவானாலும் அதில் மனது லயித்துச் செய்தால், நேரம் ஒதுக்கி செய்தால், உடம்பில் மறைந்திருக்கும் மரபணுக்கள் நமக்கான வெற்றிப் பாதையை இலகுவாக்கித் தரும் என்பதை உணருங்கள்
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker