fbpx
நேரத்தை துரத்துவோம்! | Let’s chase the time!

best motivational speaker in tamil nadu
  • February 24, 2023

பணம் முக்கியாமா? நேரம் முக்கியமா? என்ற கேள்விக்கு பணத்தைவிட நேரமே முக்கியம் என்று நாம் கூறுவதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. 

காலங்காலமாக நாம் பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்ததால், பணமே முக்கியம் என்று எண்ணி வருகிறோம். ஆனால், இன்றைக்கு உள்ள நிலை வேறு. பொருளாதாரம் தாராளமயமாக்கப் பட்டதும், தொழில்நுட்பம் வெகுவேகமாக வளர்ந்து விட்டதும், பணத்தைவிட நேரத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்து விட்டது. இதுதான் யதார்த்தம். 

இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால் என்ன ஆகும் 

வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது 

 ஒரு அறையில் நான்கு குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையில் உள்ள மின்விசிறியில் சில தொப்பிகள் தொங்க விடப்பட்டிருந்தன. அவற்றை இழுப்பதற்கு வசதியாக உயரமான ஸ்டூல் ஏணியும் வைக்கப்பட்டிருந்தது. 

 இந்த நான்கு குரங்குகளில் ஏதேனும் ஒரு குரங்கு, ஏணியின் மீது ஏறத் தொடங்கினால் கீழே உள்ள மற்ற மூன்று குரங்குகளின் மீதும் வெளியில் இருந்து சுடுதண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால் அந்த மூன்று குரங்குகளும் சேர்ந்து சூடு தாங்காமல், ஏணி மீது இருந்த குரங்கை அடிக்கத் தொடங்கின. 

மீண்டும், மீண்டும் எப்போதெல்லாம் ஒரு குரங்கு ஏணியில் ஏறுகிறதோ அப்போதெல்லாம் மற்ற மூன்று குரங்குகளின் மீதும் சுடு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதனால் அவை ஏணி மீது இருந்த குரங்கை அடிப்பதும் தொடர்ந்து நடந்தது. 

இதற்கிடையில், உள்ளே இருந்த ஒரு குரங்கு வெளியில் எடுக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய குரங்கு ஒன்று உள்ளே அனுப்பப்பட்டது 

இந்தப் புதிய குரங்கு ஆர்வத்துடன் ஏணி மீது ஏற எத்தனித்தபோது, பிற மூன்று குரங்குகளும் தன் மீது சுடுதண்ணீர் பீய்ச்சப்படுவதற்கு முன்பாகவே அதனை பாய்ந்து அடித்தன. ஏணி மீது ஏறினால் அடி விழும் என்று மட்டும் புரிந்து கொண்டது, புதிய குரங்கு. 

இரண்டாவது குரங்கும் மாற்றப்பட்டது. சுடுதண்ணீர் பீய்ச்சப்படாமலேயே ஏணியில் ஏறிய இரண்டாவது குரங்குக்கும் அடி விழுந்தது 

பிறகு மூன்றாவது, நான்காவது குரங்குகளும் மாற்றப்பட்டன. இப்போது உள்ளே தண்ணீர் பீய்ச்சுவது குறித்த விஷயமே தெரியாத நான்கு புதுக் குரங்குகள் இருந்தன 

ஏதாவது ஒரு குரங்கு ஏணியில் ஏறினால் மற்ற மூன்று குரங்குகளும் அதனை பாய்ந்து அடிக்கத் தொடங்கின. 

ஆக, இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்த உண்மை என்ன வென்றால், ‘காரணங்களைக் கண்டறியாமலேயே நம் முன்னோர் செய்ததை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது குரங்குகளின் மனோபாவம்என்பதாகும். இது அப்படியே நமக்கும் தொற்றிக்கொண்டது 

இந்தக் கோணத்தில்தான் நேரத்தைவிட பணமே முக்கியம் என்ற பழைய சிந்தனையை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். 

உங்களுக்கு நாள்தோறும் இரண்டு மணி நேரம் அதிகமாகக் கிடைத்தால், உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் அல்லவா? அப்படியானால், பேருந்தில் பயணம் செய்யாமல் பைக் வாங்கிக்கொள்ளுங்கள் 

அல்லது பைக்கில் செல்லாமல் கார் வாங்கி டிரைவரை வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் மிச்சமாகும் நேரத்தில் அதிகப் பணம் ஈட்டலாம். 

இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu

Comments are closed.