தொழில் தொடங்க எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் எத்தனை பேரால் முடிகிறது?
தொழில் தொடங்க முதலீடு என்பது இரண்டாம்பட்சம்தான். முயற்சியும் மூளையும் தான் முக்கியம் என்று சிலர் போகிற போக்கில் சொல்லலாம்.. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது..?
என் அறிவுக்கும் திறமைக்கும் நான் தொழிலில் இறங்கினால் நிச்சயம் வெற்றிதான். இறங்கத்தான் தயக்கம் என்பது பலரது நிலை. இவர்களது கையைக் கட்டிப் போடுவது எது..?
மூணாங்கிளாஸ் படிச்ச அவனுக்கே காசு கொட்டும்போது நானெல்லாம் பிசினஸ் பண்ணினா, எவ்வளவோ சம்பாதிக்க முடியும். இறங்கலை… அவ்வளவுதான்’ என்று சவடால் அடிப்பார்களைத் தடுப்பது எது..?
வீட்டு வாடகை அல்லது வீடு வாங்கியதற்கான வங்கிக் கடன், குடும்பத்தினரின் சாப்பாட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு என அடிப்படையான மாதச் செலவுகளை சமாளிக்க உதவும் தொகையை யாராவது கொடுக்கத் தயாராக இருந்தால் தான் தொழில் பக்கமே போவதென்று பார்ட்னர்கள் தேடி அலைபவர்கள் பலர்.
தொழிலைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுத்தவர்களே ஜெயித்திருக்கிறார்கள். மற்றோரெல்லாம் ரஸ்க் டயலாக் விட்டுக்கொண்டு கரையிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
தைரியமாகத் தொழிலில் இறங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்..? தொழிலில் போட்ட பணம் திரும்பி வரும் என்பதற்கும், நிலையான வருமானம் வரும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்றைக்கு நல்ல நிலையில் தொழில் வருமானத்தோடு இருப்போரல்லாம் ரிஸ்க் எடுக்கத் துணிந்த வர்கள்தான்.
ரிஸ்க் எடுக்கத் தயார் நான் என்பவர்களுக்கு அடுத்து காத்திருக்கிறது, இன்னும் எண்ணற்ற கேள்விகள். அவை இதோ…
இந்தக் கேள்விகளில் குறைந்தபட்சம் பத்து கேள்விகளாவது உங்கள் மனதில் எழுந்திருந்தால், உங்களுக்குள் நிச்சயம் இருக்கிறது தொழில் தொடங்கும் ஆர்வம். சரியான பதிலும், திட்டமிடலும் இருந்தால் தொழிலில் தைரியமாக குதித்து விடலாம்.