நாள்தோறும் பணம் சம்பாதிக்க எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்? நீங்கள் 8 மணி நேரம் செலவழிப்பவராக இருந்தால் கூடுதலாக 4 மணி நேரம் செலவழிக்க முயற்சியுங்கள். ஆரம்பத்தில் அது பணமாக திரும்ப வராவிட்டாலும், நாள் செல்லச்செல்ல பணம் கொட்டத் தொடங்கியது.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், புத்திசாலி தோற்கலாம்; தந்திரசாலி தோற்கலாம்; காரியவாதி தோற்கலாம்; கெட்டிக்காரன் தோற்கலாம்; ஆனால் உழைப்பவன் தோற்றதாக சரித்திரமே கிடையாது. வேண்டுமானால், அவன் வெற்றி சற்று தள்ளிப் போகலாம். அவ்வளவு தான்.
‘கேட்கிறதுக்கு நல்லதுதான் இருக்கு… ஆனா 8 மணி நேரம் உழைக்கிறதுக்கே வேலையில்ல…
கூட 4 மணி நேரம் உழைக்க என்ன சார் இருக்கு?’ என்று உங்களில் சிலர் யோசிப்பது புரிகிறது.
சரியான கேள்விதான். இதோ உங்களுக்காக மூன்று உத்திகள்!
1. உங்களுக்கு உதவத் தகுதியுடைய புதிய, புதிய மனிதர்களைச் சந்தித்துக் கொண்டே இருங்கள். குறிப்பாக, உங்கள் ஊரில் உள்ள சுமார் 50 பணக்காரர்களைப் பட்டியலிட்டு அவர்களை உங்கள் வளர்ச்சி நிமித்தமாக அடிக்கடி பார்த்துக் கொண்டே இருங்கள். தட்டினால்தான் கதவு திறக்கும். முயற்சித்தால்தான் வாய்ப்பு கிடைக்கும்.
2. உங்களுடைய வாடிக்கையாளர்கள் தான் உங்கள் வளர்ச்சியின் அஸ்திவாரம். எனவே, முதலில் சில வாடிக்கையாளர்களுக்கு லாபம் எதிர்பார்க்காமல் சேவையாற்றுங்கள்.
3. உங்கள் லாபத்தை பிறரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால், நீங்கள் பணம் ஈட்ட பலரும் உதவுவார்கள்.
முயற்சி, சேவை, இலாபப் பகிர்வு இந்த மூன்றும் உங்கள் உழைப்பை அதிகரித்து, லாபத்தைப் பெருக்கும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker