ஒரு நிறுவனத்தில் பணியாளர்களின் சில தவறுகளால் ரூ.50 கோடி தஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்குச் சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார் நிறுவனத் தலைவர். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவரின் சோகம் கண்டு விசாரித்தார். அனைத்தும் கேட்டபின், “50 கோடி பணம் இருந்தால் உன் பிரச்னை தீர்ந்துவிடுமா..? அப்படியா, நான் யார் தெரியுமா? என்று கேட்ட அவர் சொன்ன பெயர், அந்த ஊரின் பிரபல செல்வந்தரின் பெயர். அசந்து போனார் இவர். இவரின் முகமலர்ச்சியை சம்மதமாக எடுத்துக் கொண்ட அந்த செல்வந்தர், செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி. “இந்தா.. இது 500 கோடி ரூபாய்க்கான செக் நீ கேட்டதை விட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒரு வருடம் கழித்து இந்தப் பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் நீ வருவாயென இங்கே நான் காத்திருப்பேன்…” என்று சொல்லிவிட்டு செக்தை இவர் கைகளில் திணித்து விட்டுச் சென்றார் அவர்.
நிறுவனத் தலைவர் வேகமாக அலுவலகத்துக்குச் சென்று செக்கை பீரோவில் பத்திரமாக வைத்துப் பூட்டினார். பின் ஊழியர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, பேச ஆரம்பித்தார். “நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது. ஆனால் நான் அந்தப் பணத்தைத் தொடப்போவதில்லை. இந்த நஷ்டம் எதனால் எப்படி ஏற்பட்டது..? என்று ஆராய்ந்து நமது நிறுவனத்தை வெற்றி பாதைக்குத் திருப்ப வேண்டும். நீங்கள் அனைவரும் ஒத்துழைப்புக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். பணிகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன. நிறுவனருடைய பேச்சு, மூச்சு, செயல், சிந்தனை. தூக்கம் அனைத்தும் அவருடைய தொழிலைப் பற்றியே இருந்தது. பணியாளர்கள். திரும்பியது. ஒத்துழைப்பால் நிறுவனம் லாபப் பாதைக்குத் திரும்பியது. ஒரு வருடம் கழிந்தது, கணக்குகள் அலசப்பட்டன. நிறுவனம் 150 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது. அடுத்த நாள் விடியலிலேயே! செல்வந்தர் கொடுத்த ரூ500 கோடிக்கான செக்கோடு பூங்காவுக்கு விரைத்தார். அதே சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். தூரத்தில் அந்த செல்வந்தரிடம் ஒரு பெண்மணி கோபத்துடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்றார்.
பத்து வருஷமா பணமே இல்லாத செக் புக்கை கிழிச்சுக் கிழிச்தக் கொடுக்கிறதை வேலையா வெச்சுக்கிட்டு பலரையும் ஏமாத்தறீங்க… தொழில்ல நஷ்டம் அடைஞ்சு நீங்க பைத்தியம் ஆனது தெரியாம அவங்களும் வாங்கிக்கிட்டுப் போறாங்க… இதையெல்லாம் எப்போதான் நிறுத்தப் போதிங்க..? என்று திட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. செல்வந்தர் புன்னகையோடு செக்கில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார். நிறுவனத் தலைவர் திக்பிரமை பிடித்து நின்றார். ‘அப்படியானால், தம்மால் முடியும் என்ற நம்பிக்கைதான் நம்மைக் காப்பாற்றியதா…? உண்மை புரிந்தவராக அங்கிருந்து நகர்ந்தார் நிறுவனத் தலைவர்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker