ஒருவர் எவ்வளவு பிரச்சனைகளை எதிர்கொண்டு மீண்டு வருகிறாரோ அவரே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், உண்மைநிலை இப்படியிருக்க. பெரும்பாலானோருக்கு பிரச்சனை என்றாலே தயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கவலையை விடுங்கள்! அந்த தயக்கத்தை போக்குவதற்கும் வழி இருக்கிறது.
உங்கள் நடவடிக்கைகளை நீங்கள் உற்று கவனித்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஏதோ சில மணி நேரம் சிறப்பாக நீங்கள் செயல்படுவது தெரியும்.
அது காலையில் அலுவலகம் வந்தவுடன் 10 மணியிலிருந்து 12 மணி வரையாகத்தான் இருக்க
வேண்டும் என்று அவசியமில்லை. சிலருக்கு மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையாகக் கூட இருக்கலாம். சிலருக்கு மதியம் 1 மணி முதல் 3 மணி வரையாகக் கூட இருக்கலாம்.
உங்களையும் அறியாமலேயே சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அந்த நேரத்தையே நீங்கள் விரும்பியிருப்பீர்கள்.
உதாரணத்திற்கு, உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர், “சார், இந்த டெண்டருக்கு அப்ளை பண்றது பற்றி டிஸ்கஸ் பண்ணனும்” என்று சொல்லும் பொது, “நாளை மதியம் பார்த்துக்கொள்வோம்” என்று சொல்லி இருப்பீர்கள்.
இதுபோன்ற, உங்கள் மூளை சிறப்பாகச் செயல்படக்கூடிய நேரம் எதுவென்று கண்டறிந்து அந்த நேரத்தில் உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு எடுக்கலாம்.
இதே போல், நாள்தோறும் சில மணி நேரம் உங்களது மூளை மிகவும், மெதுவாக வேலை செய்யும். உங்கள் கவனம் திசை திரும்பிக்கொண்டே இருக்கும் அப்போது பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காமல், சாதாரண வேலைகளைச் செய்யலாம்.
இப்படி உங்கள் உடலும், மனமும், மூளையும் சிறப்பாக செயல்படக்கூடிய ஆரோக்கிய நேரத்தைக் கண்டறிந்து கொண்டால் நீங்கள் பணக்காரர்களாக உயர முடியும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker