வெற்றியாளர்கள் இலக்கை, பணி / தொழில் சார்ந்த இலக்கு, பொது வாழ்க்கை சார்ந்த இலக்கு, தனி மனித இலக்கு என மூன்று களங்களாகப் பிரித்துக் கொள்கின்றனர்.
இப்போது, உங்கள் வாழ்க்கையில் அடுத்த பத்து ஆண்டுகளில், பணி / தொழில் துறையில், பொது வாழ்க்கையில், தனி வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்? என்று ஒரு பட்டியலை முதலில் தயார் செய்ய வேண்டும்.
பிறகு உங்கள் இலக்கை, உங்களைச் சுற்றியுள்ளோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன தேவை என்று தெரிந்தால்தான், அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். மேலும், நீங்கள் எப்போதேனும் திசை மாறிப் பயணித்தால், உங்களுக்கு நினைவூட்டி சரியான பாதைக்குத் திருப்பி விட அவர்கள் உதவுவர். இலக்கை நிர்ணயிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அதைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதும் முக்கியம்.
இலக்குகள், துல்லியமாகவும் (Specific), அளக்கக் கூடியதாகவும் (Measurable), செயல் திட்டம் கொண்டதாகவும் (Action Plan), நடைமுறைச் சாத்தியம் உள்ளதாகவும் (Realistic), கால அளவோடும் (Time Line) இருக்க வேண்டும்.
இப்படி வரையறுக்கப்படும் இலக்குகளுக்கு SMART Goals என்று பெயர் உதாரணமாக ‘நான் வீடு வாங்கப் போகிறேன்” என்று இலச்சினை வரையறுக்காமல், நான் 2030-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்குள், திருச்சியில் 1200 சதுர அடி பரப்பளவு கொண்ட ஒரு வீட்டிற்குச் சொந்தக்காரனாவேன்‘ என்று வரையறுத்தால் மனதிற்கு நம்முடைய தேவை தெளிவாகப் புரியும்.
இது தான் வெற்றியாளர்கள் பின்பற்றும் உத்தி!
—–இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker