ஒருவர் இந்தியாவில் இருந்து கிழக்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று காலியான இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.
சர்வர் வந்து தம்மிடம் ஆர்டர் கேட்பார் எனக் காத்திருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இவருக்கு எதிரில் தட்டில் உணவை எந்திக்கொண்டு வயதான ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார். இவரின் நிலைமையைப் பார்த்துவிட்டு அந்த உணவகம் செயல்படும் முறையை அவருக்கு விளக்கினார். நீங்கள் நேரில் சென்று, இடதுபுற மூலையில் இருந்து தொடங்குங்கள். வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுகளில், உங்களுக்கு தேவையானவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, வலதுபுற மூலையில் உள்ள கேஷ் கவுண்டருக்கு செல்லுங்கள் அங்கு அவர்கள், நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று சொல்வார்கள்” என்றார். அதை அப்படியே பின்பற்றி உணவை எடுத்துக் கொண்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் அவர், சிரித்துக் கொண்டே அந்தப் பெண்மணி தொடர்ந்தார்: “நம் வாழ்க்கைகூட ஒருவிதத்தில் இப்படித்தான். நாம் எதை வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் அதற்குரிய விலையை அல்லது உழைப்பைக் கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் கோடீஸ்வரராக வேண்டும் என்று விருப்பப்பட்டால்கூட, பிறர் வந்து உதவுவார்கள் என்று காத்திருந்தால் அது நடக்காது; மாறாக நாமே முயற்சித்துத்தான் அதனைப் பெற வேண்டும்” என்றார்.
ஆம்! இலக்கை அடைய பிறர் உதவுவார்கள் என்று காத்திருக்காமல் நாம் உழைக்கத் தொடங்க வேண்டும்.
– – இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker