பணக்காரர்கள் என்றைக்காவது நடுரோட்டில் கட்டிப் புரண்டு சண்டை போடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
பார்த்திருக்க முடியாது.
ஏனென்றால், பணக்காரர்கள் சண்டை போடுவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை.
மேலும், அவர்கள் சண்டைக்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை.
சண்டைகளும், வாக்குவாதங்களும் ஏன் ஏற்படுகின்றன தெரியுமா?
கருத்துகள் ஒத்துப் போகாமையால்தான்!
அவர்கள் ஒரு சிறிய மீட்டிங்கிற்கு செல்வது என்றால்கூட, அங்கு என்ன பேசவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்கிறார்கள். இதனால் தேவையற்ற வாக்குவாதங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. தேவையற்ற வாக்குறுதிகளையும் அவர்கள் கொடுப்பதில்லை.
சண்டைகளும் வாக்குவாதங்களும் நேரத்தை வீணடிக்கக்கூடியவை. எதிரிகளை உருவாக்கக்கூடியவை; நன்மதிப்பை குறைக்கக்கூடியவை; மன அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடியவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இந்தப் புரிதல் இல்லாதவர்கள், இரவு வெகு நேரம் மதுக்கடைகளில் அரட்டை அடித்துக் கொண்டும், எவருக்கோ ஆதரவாக வாக்குவாதம் புரிந்துகொண்டும், இரவு நீண்டநேரம் தூங்கியும், காலையில் தலைவலியோடு எழுந்திருத்தும், ஆரோகியத்தையும், நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
– இராம்குமார் சிங்காரம், Tamil Motivational Speaker