fbpx
Do You Want To Fail? | நீங்கள் தோற்க வேண்டுமா ? 

pineapple meeting - motivational speaker in tamil
  • July 8, 2021

காலையில் எழுந்தோம்; குளித்தோம்;உணவருந்தினோம்; அலுவலகம் சென்றோம்; வீடு திரும்பினோம்; டி.வி. பார்த்தோம்; தூங்கினோம் என ஒரே மாதிரியான

வாழ்க்கையை வாழ்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை. 

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் தேவையென்றால், உங்கள் செயல்பாடுகளில் மாற்றம் தேவை. உள்ளீட்டில்  (Input) மாற்றம் இருந்தால்தானே வெளியீட்டிலும் (Output)  மாற்றம் வரும்? 

நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை; உள்ளதும் போய்விட்டால் நீரா உதவுவீர்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. தொடர்ந்து படியுங்கள் 

நிர்வாகவியல் படிப்பைப் படிக்க வேண்டுமென்றால், இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.எம்.தான். ஏன் தெரியுமா? அங்குதான், நடைமுறையில் பல்வேறு நிறுவனங்களில் நிகழ்ந்த பிரச்சனைகளையும், அவர்கள் கையாண்ட தீர்வுகளையும்கேஸ் ஸ்டடியாகக் கற்றுத் தருகிறார்கள். 

அதுபோல, நீங்களும் ரிஸ்க் எடுக்க வேண்டுமென்றால், உங்களுக்கு முன்பு ரிஸ்க் எடுத்தவர்கள் பற்றியும், அவர்கள் அவற்றை எதிர்கொண்ட விதம் பற்றியும் நிறைய படிக்க வேண்டும். அல்லது கேட்டாவது தெரிந்து கொள்ள வேண்டும். ரிஸ்க் எடுக்கத் துணிச்சல் இருந்ததால்தானே உங்களை விட உயர்ந்து நிற்கிறார், உங்கள் முதலாளி? 

ரிஸ்க் எடுப்பதில் நமக்குள்ள சிரமம் என்னவென்றால், ‘அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சனைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்பதுதான். 

நமக்கு தெரிந்த ஒரு நண்பரது தொழிற்சாலையில் 460 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு இ – மெயில் குரூப் அங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. நாள்தோறும் மாலையில் வேலை முடித்துச் செல்லும்போது அன்று தாம் சந்திதத் புதிய பிரச்சனைகளையும், அதற்கு தாம் உருவாக்கிய தீர்வையும் ஒவ்வொருவரும் எழுதி அனுப்புகிறார்கள். 

இந்த ஒவ்வொரு தீர்வையும் ஒரு குழு ஆராய்ந்து, அதில் சிறந்தவற்றுக்கு வாரந்தோறும் பரிசினை வழங்குகிறது. பிறகு அது புத்தகமாகவும் வெளியிடப்படுகிறது. 

அந்தப் புத்தகத்தில் துறைவாரியாக தீர்வுகள் அட்டணையிடப்பட்டுள்ளதால், யாருக்கேனும் பிரச்சனை தோன்றுகிறபோது, ‘ஐயோ, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் பிரச்சனை ஏற்படுகிறது?’ என்று புலம்பாமல், உடனே அப்புத்தகத்தை எடுத்துப் பார்த்து தாமே சரி செய்து கொள்கின்றனர். இந்தப் புத்தகத்திற்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? ‘வெற்றிக் குறிப்புகள்‘. 

பிரச்சனை எப்படிப்பட்டதாக  வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணத்திற்கு, ஒரு  டிபார்ட்மென்டல் ஸ்டோரை  எடுத்துக்கொள்வோமேதிடீரென்று  ஸ்டாக் தீர்ந்து போகலாம்; ஏ. சி. ரிப்பேர் ஆகலாம்; பில்லிங் மெஷின் பழுதாகலாம் 

ஒரு ஊழியர் பணத்தை கையாடல் செய்யலாம்; வாடிக்கையாளருக்கு காலாவதியான பொருளை தவறாகக் கொடுத்து, அதனால் அவர் கோபத்தோடு சண்டை போடலாம்என இப்படி நாள்தோறும் நிறைய பிரச்சனைகளை அந்நிறுவனத்தினர் எதிர்கொண்டு அவற்றுக்கு புதுப்புதுத் தீர்வுகளை உருவாக்கிக் கொண்டேயிருப்பார்கள். 

இந்தக் குறிப்பிட்ட  பிரச்சனைகளும்தீர்வுகளும்  ஒரு  கட்டத்தில்  மறந்து போகலாம்புதிதாக  வரும்  ஊழியர்களுக்கு  அன்றாடப்  பிரச்சனைகளைக்  கண்டு தன்னம்பிக்கை  குறைந்து  போகலாம். 

இதற்கு  மாற்றாக  தீர்வுகளை  ஆவணப்படுத்திதீர்வு  தரும்  ஊழியர்களை ஊக்கப்படுத்தி,  ‘நீங்களே  உங்கள்  பிரச்சனைகளைத்  தீர்க்க  முடியும்‘  என்று திரும்பத்  திரும்ப  தமக்கு  கீழ் பணியாற்றுபவர்களிடம்  நம்பிக்கையை  ஏற்படுத்தி, நாம்  வெற்றியை  நோக்கிப்  பயணிக்கலாம். 

அண்மையில்  ஒரு  அலுவலகத்தில்  கான்ஃபரன்ஸ்  அறையில் அமர்ந்திருந்தபோது, அங்கு  மதியம்மணிக்கு  ‘பைன்  ஆப்பிள்  மீட்டிங்‘  என்று எழுதி இருந்தார்கள்ஆச்சரியப்பட்டு  நண்பரிடம்  வினவினேன். 

நாம்  நண்பர்களோடு  சேர்ந்து  சந்தோஷத்தை  அணுபவிக்கிறோம்ஆனால் பிரச்சனை  என்கிறபோது  மட்டும்  தனியாக  சிந்திக்கிறோம்இதற்கு  மாற்றாக பிரச்சனைகளைத்  தீர்க்க  அலுவலகத்தில்  எல்லோரும்  ஒன்று  கூடிவிவாதித்து, தீர்வை  உருவாக்கலாம்இப்படி  எங்கள்  அலுவலகத்தில்  பிரச்சனைகளைப்  பற்றி பேசுவதற்கான  மீட்டிங்கிற்குதான்  ‘பைன்  ஆப்பிள்  மீட்டிங்‘  என்று  பெயர். மாதத்திற்கு  ஒரு  முறை  ஒவ்வொரு  துறையிலும்  இந்த  மீட்டிங்  நடக்கும்இது தவிர  தேவை  ஏற்பட்டால்  அவ்வப்போதும்  மீட்டிங்  நடத்தப்படும்”  என்றார். 

அது சரிஅதற்கு  ஏன்  ‘பைன்  ஆப்பிள்‘  என்று பெயர்  வைத்தீர்கள்?” 

அன்னாசிப்  பழத்தை பார்த்தவுடன் முள்ளோடு  இருக்கிற  பழத்தை  எப்படி சாப்பிடுவது என்று பலருக்கும் தயக்கம் ஏற்படும். ஆனால், குடுமியை வெட்டி பழத்தின் மேல்புறத்தை சீவி சிறிது சிறிதாக நறுக்கினால் சாப்பிடும் வழி கிடைத்துவிடும். அதுபோன்றவைதான் பிரச்சனைகளும். மேலெழுந்தவாரியாக பார்க்கிறபோது கடினமாகத் தோன்றினாலும், படிப்படியாக அலசி ஆராய்ந்தால், தீர்வுகள் தென்படும்என்றார். 

ஆகநீங்கள்  தோற்காமல்  இருக்க  வேண்டுமானால்ரிஸ்க்  எடுக்க  வேண்டும். ரிஸ்க் எடுக்கும்போது, அன்றாடப் பிரச்சனைகளைக் கண்டு பயப்படக்கூடாது. அவற்றுக்குத் தீர்வு காணும் தனி  மனிதர்களை  ஊக்கப்படுத்திஅந்தத்  தீர்வுகளை ஆவணப்படுத்தலாம்  அல்லது  குழுவாக  அவற்றைத்  தீர்க்கப்  பழக்கலாம். 

நீங்கள்  தற்போது  செய்யவேண்டியது  என்னவென்றால்அடுத்த  ஏழு  நாட்கள் நீங்கள்  எதிர்கொள்ளும்  பிரச்சனைகளையும், அதற்கு  நீங்கள்  உருவாக்கும் தீர்வுகளையும்  ஆவணப்படுத்துங்கள்அதுபெட்ரோல்  தீர்ந்த  பைக்கை தள்ளிக்கொண்டு  போவதிலிருந்துமாதக்  கடைசியில்  காசில்லாமல்  நண்பரிடம்  கடன்  வாங்குவது  வரைஎந்தப்  பிரச்சனையாக  இருந்தாலும், திரும்பவும்  அந்தப்  பிரச்சனை  தோன்றாமல்  இருக்க  என்ன  செய்ய  வேண்டும் என்று  யோசியுங்கள்உங்களால்  தீர்வு  காண  முடியாத  பிரச்சனைகளுக்குபைன்  ஆப்பிள்  மீட்டிங்கை‘  நடத்தி  குழுவாகத்  தீர்வு  காணுங்கள்! 

Comments are closed.