ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அவர்களில் யாரிடம் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஒப்படைப்பது என்று குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. நமக்கு மிக நெருங்கிய பணக்கார நண்பர் ஒருவரை அழைத்து ஆலோசனை கேட்டார்.
அந்தப் பணக்கார நண்பரும், மூன்று மகன்களையும் நேரில் சந்தித்தார்.
உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பியூன், டிரைவர், ஸ்வீப்பர் போன்றவர்களின் பெயர் தெரியுமா? அவர்களின் குடும்ப விவரத்தை விசாரித்திருக்கிறீர்களா ? அவர்களில் ஒரு சிலரின் வீட்டிற்காவது நேரில் சென்றிருக்கிறீர்களா? என்று அவர்களிடம் கேட்டார்.
இந்த மூவரில் இரண்டாவது மகன் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் பாசிட்டிவாக பதில் சொன்னதால் அவரிடமே அந்த நிறுவனத்தின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
இப்பொது இந்த கேள்வியை நீங்கள் உங்களிடம் கேட்டுப்பாருங்கள்.. உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் பெயர் உங்களுக்கு தெரியுமா ? இந்த கேள்வி அவ்வளவு முக்கியமா என்று நீங்கள் யோசிக்கலாம்.
முக்கியம்தான், ஏனெனில் நம்மிடம் பணியாற்றுபவர்கள் வெறும் ஊதியத்தை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அன்பையும், மதிப்பையும் கூட எதிர்பார்க்கிறார்கள். அவற்றை நாம் வழங்கினால் அவர்களுடைய திறமையை பன்மடங்கு வெளிப்படுத்தி நாம் வளர்ச்சி பெற உதவுவார்கள். நமோடு பணியாற்றுகிற சூழ்நிலை ஊழியர்கள் தொடங்கி உயர் அதிகாரிகளாக இருக்ககூடிய அறிவாளிகள் வரை அனைவர்க்கும் இது பொருந்தும்.
ஒரு பணக்காரருடைய வளர்ச்சி என்பது அவரால் மட்டுமே ஏற்படுவதல்ல அவருக்கு பின்னால் இயங்கக்கூடிய பலரது கூட்டு முயற்சிகளால் ஏற்படுவதே ஆகும். பணக்காரர்கள் இதனை அறிந்து வைத்திருப்பதால் தான், எப்போதும் அவர்களை சசுற்றி அறிவாளிகளை வைத்திருப்பார்கள்.
ஆனால், நம்மில் பலரோ, நம்மை சுற்றிலும் ‘ஆமாம் சாமிகளை உடன் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். பிறர் ஆலோசனைள் சொல்வதை நாம் விரும்புவதில்லை.
நீங்கள் சொந்த நிறுவனத்தை நடத்துபவரார்க இருந்தால் உங்கள் நிறுவனத்தில் எத்தனை அறிவாளிகளிகளை வேலைக்கு வைத்திருக்கிறீர்கள் என்று யோசித்து பாருங்கள். அந்த எண்ணிக்கையை அதிகரித்தால் நீங்களும் பணக்காராகி விடுவீர்கள்.
பொதுவாக, பலரும் சொல்வது என்னவென்றால், “வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை; இதில் அறிவாளிகளை எங்கு தேடுவது?” என்பதுதான்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சுமார் 5 லட்சம் பேரும், அரசுத் துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்து ஓய்வு பெற்று சுமார் 1 லட்சம் பேரும் வெளிவருகிறார்கள். எனவே வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்பது ஏற்புடையதல்ல, அதற்கென களத்தில் இருக்ககூடிய மனிதவள நிறுவனங்களை அணுகி, ஆட்களை தேர்வு செய்யலாம். உங்களுடைய அடுத்த கேள்வி, ‘என்னுடைய நிறுவனம் சிறியதாயிற்றே, மெத்த படித்தவர்கள், அறிவாளிகள், உயர் பதிவி வகித்தவர்களெல்லாம் வேலைக்கு வருவார்களா?’ என்பதுதானே ?
நாம் பணியாளர்களை வேலைக்கு தேர்வு செய்கிற போது அவர்கள் சார்ந்த கேள்விகளையே அதிகம் கேட்கிறோம் அதில் தவறில்லை. ஆனால், நம் நிறுவனத்தைப் பற்றியும் அதன் எதிர்கால வளர்ச்சிப் பற்றியும், இதில் பணியாற்றுவதால் அவர்களுக்கு கிடைக்கப்போகிற சுகானுபவம் குறித்தும் நாம் சொல்வதில்லை. பணக்காரர்கள் ஒவ்வொரு முறையும் பிறரோடு பேசுகிறபோது அதனால் தனக்கு என்ன லாபம் என்று மட்டுமே யோசிப்பதில்லை. தம்மோடு இணைவதால் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன நன்மை ஏற்படும் என்று சிந்திகிறார்கள். அதையே வெளியிலும் சொல்கிறார்கள். இதுவே அவர்களிடம் அறிவாளிகளைக் கொண்டு வந்து சேர்க்கிறது. நீங்கள் உங்கள் காதலியிடம் பேசுவதில் தொடங்கி, உங்கள் நிறுவனத்திலன் முதலாளி அல்லது உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி, வங்கி அதிகாரி, வாடிக்கையாளர், முதலீட்டாளர் வரை அனைவருடனும் இணைந்து பணியாற்றும்போது, உங்களோடு இணைவதால் அவர்களுக்கு எப்படி அதிக பயன்களை பெற்றுத் தர முடியும் என்று யோசிக்க வேண்டும். அப்படி யோசித்தால் அவர்கள் எப்போதும் உங்களுடன் இணைந்திருப்பார்கள். நீங்கள் மட்டும் வெற்றி பெற்றால், அது சராசரி மனிதனின் மனோபாவத்தைக் குறிக்கும். உங்களோடு உடனிருக்கும் பிறரையும் வெற்றி பெறச் செய்தால் அது பணக்காரர்களின் மனோபாவத்தை குறிக்கும்.
– இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker