fbpx
அனுபவத்தால் பயன் பெறுங்கள்! | Benefits of experience!

Tamil motivational speaker
  • April 28, 2022

உலகின் மிகப்பெரிய 29,000 அடி செங்குத்தான உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மீது,  1953 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் முதலில் காலடி எடுத்து வைத்தார் சர். எட்மண்ட் ஹிலாரி. 

இந்த வெற்றியை எட்ட அவர் எடுத்த முயற்சிகள் தான் எத்தனை, எத்தனை…? பனிக்கட்டிகளால் சூழப்பட்ட மிகப் பெரிய மலைகள் தவறி விழுந்தால் தேடுவதற்குக்கூட ஆள் அரவம் இல்லாத இடங்கள் அடுத்து என்ன இருக்கும் என்று கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத திகிலான வழித்தடங்கள் இப்படி பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அவரது பயணம் தொடர்ந்தது. இதனால் எட்மண்ட் பலமுறை தோற்க நேர்ந்தது. அப்படி அவர் ஒவ்வொரு முறை தோற்ற போதும் அவர் தன்னை எப்படி ஊக்கப்படுத்திக் கொண்டார் தெரியுமா? 

இதற்கான பதிலை, இங்கிலாந்தில் அவருக்கு நடத்தப்பட்ட ஒரு மாபெரும் பாராட்டு விழாவின் போது அங்கு வந்திருந்த சான்றோர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்ட அவர், மைக்கைக் கையில் எடுத்துக் கொண்டு  பின்னால் பெரிதாக மாட்டப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரத்தின் வரைபடத்தருகே சென்றார். 

நான் பலமுறை முயற்சிகளை மேற்கொண்டு தோற்றிருக்கிறேன். அப்போதெல்லாம், இதோ இங்கே இருக்கிறதே, இது போன்ற வரைபடத்தில் முன் நின்று உரக்க சபதமெடுப்பேன். ‘, சிகரமே! என்னை நீ பலமுறை தோற்கடித்துவிட்டாய். ஆனாலும், நான் கவலைப்பட மாட்டேன். என்றாவது ஒரு நாள் உன்னை  நான்  வெற்றி கொள்வேன். ஏன் தெரியுமா? உன்னால் இதற்கு மேல்  வளர முடியாது. ஆனால் நானோ தினம் தினம் வளர்ந்து கொண்டே இருக்கிறேன் இப்படி ஒவ்வொரு தோல்வியின் போதும் சொல்வேன் என்று கூறினார். 

அவரது தன்னம்பிக்கை வார்த்தைகளில் அரங்கமே அதிர்ந்தது. 

செலவுகளும் இதைப் போன்றவைதான். தொடக்கத்தில் கட்டுக்குள் அடங்காமல் திமிறி நிற்கிற பல செலவுகள், காலம் செல்லச் செல்ல அனுபவத்தில்அடங்கிவிடும் எது செலவு எது முதலீடு எந்தச் செலவைக் கட்டுப்படுத்தலாம்எதைத் தவிர்க்கலாம்? என்பவை, தானே தெரியவரும். ஏனெனில் செலவுகள் நிலையாக இருப்பவை. ஆனால், நாமோ அன்றாடம் பெறுகிற அனுபவத்தால் வளர்ந்து கொண்டே இருக்கிறோம் அல்லவா? 

 

                                                                     ———-  இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.