மாபெரும் எழுத்தாளர் சாக்ரட்டீஸிடம் ஒரு இளைஞன் வெற்றியின் ரகசியத்தைக் கேட்டான். சாக்ரட்டீஸும் அவனை மறுநாள் காலையில் அந்த ஊரில் உள்ள பிரபலமான ஆற்றங்கரைக்கு வரச் சொன்னார்.
அங்கு வந்த அவனை அழைத்துக் கொண்டு ஆற்றிற்குள் இறங்கினார். ஆற்றுநீரின் அளவு கழுத்துப் பகுதிக்கு வந்தவுடன் அந்த இளைஞனின் தலையை தண்ணீருக்குள் ஓங்கி அழுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத அந்த இளைஞன், மூச்சுக் காற்றுக்காக ஏங்கி அவர் பிடியில் இருந்து வெளிவரத் தவித்தான்.
சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு, சாக்ரட்டீஸ் அவன் தலையை வெளியே எடுக்க அனுமதித்தார். அவன் தலையை வெளியில் எடுத்தவுடன், அவசர அவசரமாக மூச்சுக் காற்றை உள்வாங்கி யதார்த்த நிலைக்கு வந்தான்.
சற்று கோபத்தில் இருந்த அவனிடம் சாக்ரட்டீஸ் கேட்டார்: “தண்ணீரில் உன் தலை மூழ்கியிருந்தபோது உனக்கு என்ன தேவைப் பட்டது?”
“மூச்சு காற்று“
“இதுதான் வெற்றியின் ரகசியம். எப்படி நீரில் உள் தலை மூழ்கியபோது,
மூச்சுக் காற்றில் மட்டுமே உன் கவனம் இருந்ததோ, அதுபோல் வெற்றி
தேவை என்பதில் மட்டுமே உன் முழு கவனமும் இருக்குமானால்,
நிச்சயம் நீ வெற்றி பெற முடியும்” என்றார் சாக்ரட்டீஸ்.
ஆம் ! தீவிரம், வெறி இவற்றோடு உங்கள் இலக்கின் மீது கவனமும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
_ இராம்குமார் சிங்காரம், Best motivational speaker in tamil nadu