fbpx
விளம்பரச் செலவுகள் அவசியமா? ஆடம்பரமா? | Are advertising costs necessary? Luxury?

tamil motivational speaker
  • July 8, 2022

செலவைக் கட்டுப்படுத்துதல் குறித்து யோசிக்கும் போது, விளம்பரச் செலவுகள் அவசியம் தானா அல்லது அவற்றையும் குறைக்க வேண்டுமா..? என்ற கேள்வி பலருக்கு எழலாம்.           

விளம்பரத்தின் நோக்கங்கள் என்ன..? நிறுவனத்தின் பெயரை மனதில் பதிய வைப்பது முதலாவது நோக்கம். இரண்டாவது, பொருட்களை உடனே வாங்கத்  தூண்டுவதற்காக மேற்கொள்ளப்படுவது. 

 ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா, யுனிலீவர், ஸ்ரீராம், பெப்ஸி, கோக், கோல்கேட், பாமோலிவ், ஏர்டெல், பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனப் பெயர்கள் எல்லாம் உங்களுக்கு பரிச்சயமாக இருந்தால் அதற்கு அந்நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் விளம்பரங்களே காரணமாகும். இவை உடனடியாக நிறுவனங்களுக்கு வருமானத்தைத் தராவிட்டாலும் கூட, அந்நிறுவனத்தின் பெயரை மனதில் பதியவைத்து, நீண்டகால நோக்கில் லாபம் ஈட்டப் பயன்படும். எனவேதான், மார்க்கெட்டில் நம்பர் ஒன்னாக இருக்கும் நிறுவனம்கூட தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இருக்கும். 

 அடுத்த வகையானது, குறுகிய காலத்துக்கானவை. அதாவது, தள்ளுபடி விற்பனை (Discount Sale), இலவசச் சலுகைகள் (Free Offers),  நுகர்வோர் போட்டிகள் (Consumer Contests), சிறப்புச் சலுகைகள் (Special Offers) போன்ற கால் டூ ஆக்ஷன் (Call to action) விளம்பரங்கள். 

 பொதுவாக பல்வேறு தொழில்களில் நாடு முழுவதும் ஈடுபட்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதலாவது வகை விளம்பரத்துக்கு பணத்தைச் செலவழிப்பது அவசியமாகும். 

ஏனெனில் பங்குச் சந்தையில் முதலீடு திரட்டவும், பொதுமக்களிடம் வைப்பு நிதி பெறவும், திறமையானவர்களை வேலைக்கு எடுக்கவும், விநியோகஸ்தர்களை நியமிக்கவும்.. என பலவித தேவைகளுக்காக ஒரு நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பது அவசியமாகும். 

 ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு இந்த முதலாவது வகை விளம்பரங்கள் தேவையற்ற செலவே! அதே நேரம் இரண்டாவது வகை விளம்பரம் அவசியமாகும். இவ்வகை விளம்பரங்களையும்கூட தேவையற்ற வகையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெளியிடுவதில் பயனில்லை. 

 உற்பத்திப் பொருளினுடைய வாடிக்கையாளர் யார்அந்தப் பொருள் எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் விநியோகமாகும்எந்த சீசனில் இவை அதிகம் பொதுமக்களால் வாங்கப்படும்என்பன போன்ற விவரங்களின் அடிப்படையில் விளம்பரங்களை எந்தெந்த (பத்திரிக்கை, வானொலி, உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை) ஊடகங்களில் வெளியிடுவது…? என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். 

 இவற்றுக்கெல்லாம் அனுபவம் வாய்ந்த விளம்பர ஆலோசகர்கள் மாநிலம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதில் எது குறைவான செலவில் நிறைந்த பலன்களைத் தரும் என நீங்கள் கருதுகிறீர்களோ  அதனைத் தேர்ந்தெடுக்கலாம். 

                                       ———  இராம்குமார் சிங்காரம், Tamil motivational speaker

Comments are closed.